
பிரபல பாலிவுட் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஜாக்குலின் பெர்னான்டஸ், இவர் நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு நடித்து வெளியான Race 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் தொடர்ச்சியாக Race 3 திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது.
இந்த படத்திலும் கதாநாயகியாக ஜக்குலின் தான் நடித்து வருகிறார். இந்தபடத்தின் படபிடிப்புக்காக படக்குழுவினர் அபுதாபி சென்றிருக்கிறார். அவர்களோடு ஜக்குலினும் சென்றிருந்தார்.
அப்போது அங்கு பிரபலமான ஸ்குவாஷ் என்னும் விளையாட்டை விளையாடி இருக்கிறார் ஜக்குலின். அப்போது எதிர்ப்பாராத விதமாக பந்து அவரது கண்ணில் பட்டு ரத்தம் வர ஆரம்பித்துள்ளது.
பதறிப்போன படக்குழு நாயகியை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரது கண்களில் இருந்து நிற்காமல் ரத்தம் வருவதால் மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை கொடுத்து வருகின்றனர்.
ஆனால் அவரது கண்களில் என்ன பிரச்சனை என்ற விவரங்களை மருத்துவர்கள் தெரிவிக்கவில்லையாம்.
இந்த சம்பவம் குறித்து படத்தின் தயாரிப்பாளர் கூறுகையில், நடிகைக்கு கண்ணில் அடிபட்டுள்ளது உண்மைதான். பயப்புடும் அளவிற்கு எதுவும் இல்லை, அவருக்கு மிகவும் சாதாரண அடி தான் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர் என்று கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.