ஜோதிகா, கீர்த்தி சுரேஷைத் தொடர்ந்து மாதவன், அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள நிசப்தம் படத்தை அமேசான் பிரைமில் ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
கொரோனா பிரச்சனை காரணமாக, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் வெளியாக வேண்டிய படங்களே இன்னும் வெளியிடப்படாமல் உள்ளதால், இந்த பிரச்சனை அனைத்தும் முடிந்த பின், ரிலீசுக்கு தயாராக உள்ள திரைப்படங்களை, திரையரங்குகளில் வெளியிடுவது எந்த அளவிற்கு சாத்தியம் என்பது தெரியாத சூழல் உருவாகி உள்ளது. இதனால் பல திரைப்படங்கள் ஓடிடி பிளாட்பார்மில் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதையும் படிங்க: “பிகில்” இந்திரஜாவிடம் அத்துமீறிய ரசிகர்... நெத்தியடி பதிலால் தெறித்து ஓட்டம்...!
கொரோனா பிரச்சனையால் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் 'பொன்மகள் வந்தாள்' திரைப்படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான சூர்யா ஓடிடி பிளாட் ஃபாமில், இந்த படத்தை வெளியிட முடிவு செய்தார். மேலும் ரூ.4.5 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படத்தை அமேசான் நிறுவனம் 9 கோடி ரூபாய்க்கு வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வரும் 29 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக வெளியான பொன்மகள் வந்தாள் திரைப்படத்தின் டிரெய்லர் தொலைக்காட்சி மற்றும் யூ-டியூப் வாயிலாக 2 கோடி பார்வையாளர்கள் கடந்துள்ளது.
இதையும் படிங்க: அவசர அவசரமாக மருத்துவமனைக்குச் சென்ற அஜித், ஷாலினி... காரணம் இதுவா?
இதனைத் தொடர்ந்து, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள “பெண்குயின்” திரைப்படமும் அமேசான் பிரைமில் நேரடியாக வெளியாக இருந்த நிலையில் தற்போது இதன் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, ஜூன் 19ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் வெளியாகிறது.
இதையும் படிங்க: காதலர் விக்னேஷ் சிவனுக்காக ரசிகர்களை மிரள வைக்க போகும் நயன்தாரா...!
ஜோதிகா, கீர்த்தி சுரேஷைத் தொடர்ந்து மாதவன், அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள நிசப்தம் படத்தை அமேசான் பிரைமில் ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான த்ரிஷாவின் ராங்கி படத்தை ஒடிடி-யில் வெளியிட முயல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள ராங்கி படத்தை ஏ.ஆர். முருகதாஸின் உதவி இயக்குநர் மற்றும் எங்கேயும் எப்போதும் படத்தை இயக்கிய சரவணன் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர். முருகதாஸ் திரைக்கதை எழுதியுள்ளார். இதையும் ஓடிடி பிளாட்பார்மில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடப்பதாகவும், தயாரிப்பாளர் தரப்பில் இருந்து இதுவரை ஓகே சொல்லவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.