Gilli Re-Release: 20 வருடங்களுக்கு பின் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட தளபதியின் கில்லி! மாஸான வரவேற்பு கொடுத்த ரசிகர்

Published : Apr 20, 2024, 12:31 PM ISTUpdated : Apr 20, 2024, 12:35 PM IST
Gilli Re-Release: 20 வருடங்களுக்கு பின் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட தளபதியின் கில்லி! மாஸான வரவேற்பு கொடுத்த  ரசிகர்

சுருக்கம்

தளபதி விஜய் நடித்துள்ள 'கில்லி' திரைப்படம் இன்று தமிழகத்தில் ரீ-ரிலீஸ் ஆகியுள்ள நிலையில், ரசிகர்கள் தங்களின் மாஸ் வரவேற்பை கொடுத்து வருகிறார்கள்.  

சமீப காலமாக, ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்ற படங்கள் மீண்டும் ரீரிலீஸ் செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. அப்படி ரீ-ரிலீஸ் ஆன, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாபா படத்திற்கு ஏற்கனவே வெளியான போது கிடைத்த வரவேற்பை விட அதிகமாகவே கிடைத்தது. அதே போல் தனுஷ் நடித்த 3, ரெயின்போ காலனி, 96 , யாரடி நீ மோகினி , விண்ணை தாண்டி வருவாயா, திருமலை போன்ற பல படங்கள் ரீ-ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

தற்போது தமிழ் சினிமாவில் இதுவோ ஒரு ட்ரெண்டாக மாறி உள்ள நிலையில், இன்று முதல் ... தளபதி விஜய், த்ரிஷா நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான 'கில்லி' திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதற்கான முன்பதிவு கடந்த ஒரு வாரமாக முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில், இன்று பெருவாரியான திரையரங்குகளில் கில்லி திரைப்படம் ரீ-ரிலீஸில் ஆகியுள்ளது. தளபதி விஜய்யின் புதிய படம் ரிலீஸ் ஆனால் எப்படி ரசிகர்கள் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் பட்டாசுகள் வெடித்து திரைப்படத்தை வரவேற்பார்கள் அதே போல் இப்படத்தின் ரீலீஸையும் வரவேற்றுள்ளனர். 

தற்போது சமூக வலைதளத்தில் தளபதி ரசிகர்கள் ஆர்பாட்டத்துடன் இப்படத்தை வரவேற்ற வீடியோஸ் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. தளபதி விஜய் கபடி வீரராக நடித்திருந்த இப்படத்தை எத்தனை முறை பார்த்தாலும் சலித்து போகாது என்றும், மீண்டும் திரையரங்கில் பார்ப்பது புதிய அனுபவத்தை கொடுப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

 

 

இயக்குனர் தரணி இயக்கி இருந்த இந்த படத்தில், விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ், ஆஷிஷ் வித்யாதிரி, ஜானகி சுபாஷ், ஜெனிபர், தாமு, மயில் சாமி, நாகேந்திர பிரசாத், பொன்னம்பலம், பாண்டு, வினோத் ராஜ் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்திருந்தனர். இப்படம் திரையரங்கில் ரிலீஸ் ஆகி சுமார் 20 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

பெரிய ஐஸ்வர்யா ராய்னு நெனப்பு... பேபினு சொன்ன வாயை உடைச்சிருவேன் - பாரு உடன் சண்டைபோட்ட கம்ருதீன்
ஷாருக்கானுக்கு இப்படி ஒரு விசித்திரமான பழக்கம் இருக்கிறதா? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே..!