Aditi Shankar : பிரம்மாண்ட இயக்குனருக்கு பெருமை சேர்த்த மகள்.... டாக்டர் ஆனார் அதிதி ஷங்கர்

Ganesh A   | Asianet News
Published : Dec 11, 2021, 03:41 PM IST
Aditi Shankar : பிரம்மாண்ட இயக்குனருக்கு பெருமை சேர்த்த மகள்.... டாக்டர் ஆனார் அதிதி ஷங்கர்

சுருக்கம்

நடிகையாக அறிமுகமான பின் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இயங்கி வரும் அதிதி ஷங்கர், தற்போது முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி. இவர் தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். தமிழில் இவர் நடிக்கும் முதல் படம் விருமன். இப்படத்தை கொம்பன், மருது போன்ற படங்களை இயக்கிய முத்தையா இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் கார்த்தி ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தான் அதிதி நடிக்கிறார்.

விருமன் படத்தை சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து தங்களது 2டி நிறுவனம் மூலம் தயாரிக்கின்றனர். இப்படத்தில், மதுரை பெண்ணாக நடிக்கிறார் அதிதி. தேன்மொழியாக மிகவும் துணிச்சலான கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம் அதிதி. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

முதல் படம் வெளியான பின்னரே அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட் ஆக வேண்டும், என்பதில் உறுதியாக உள்ளாராம் நடிகை அதிதி ஷங்கர். நடிகையாக அறிமுகமான பின் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இயங்கி வரும் இவர், தற்போது முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதன்படி, எம்.பி.பி.எஸ் படித்து வந்த அதிதி, தற்போது படிப்பை முடித்து பட்டம் பெற்றுள்ளார். சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவருக்கு பட்டத்தை வழங்கினார். மேலும் பட்டமளிப்பு விழாவில் தனது தந்தை ஷங்கர், தாய் ஈஸ்வரி மற்றும் சகோதரர் அர்ஜித் ஆகியோருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Pandian Stores 2 S2 E689: மகளின் வாழ்க்கையை வைத்து பாக்கியம் ஆடும் பகடை ஆட்டம்.! சரவணன் அன்பா? அம்மாவின் சூழ்ச்சியா? தர்மசங்கடத்தில் சிக்கிய தங்கமயில்
Chinna Marumagal Serial: சின்ன மருமகள் சீரியலில் புதிய திருப்பம்! விஜய் டிவியின் சர்ப்ரைஸ் பிளான்!