Muddy: இந்தியாவின் முதல் Mud Race திரைப்படம்.. ரசிகர்களுக்கு செம ட்ரீட்

By karthikeyan VFirst Published Dec 11, 2021, 3:31 PM IST
Highlights

இந்தியாவில் முதன்முறையாக கரடுமுரடான மண் சாலை பந்தயத்தை மையமாக வைத்து வெளிவந்துள்ள மட்டி திரைப்படம், 6  மொழிகளில் வெளியாகி வெற்றிநடைபோடுகிறது.

இந்தியாவில் முதன்முறையாக கரடுமுரடான மண் சாலை பந்தயத்தை மையமாக வைத்து வெளிவந்துள்ள திரைப்படம் மட்டி. 6 மொழிகளில் ரிலீஸ் ஆகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றிநடை போடுகிறது இத்திரைப்படம். ஒரு முழுமையான ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படம் மட்டி. மட்டி ரேஸிங்கை காட்சிப்படுத்தியிருக்கும் விதம், ரேஸிங்கை பார்த்த முழுமையான அனுபவத்தை கொடுக்கும். மட்டி ரேஸிங் மோட்டாரிஸ்ட்டின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமாக இத்திரைப்படம் அமைந்துள்ளது.

கார்த்தி மற்றும் டோனி ஆகிய இருவருக்கு இடையேயான மட்டி ரேஸுடன் தொடங்குகிறது திரைப்படம். அந்த போட்டியில் டோனியை வீழ்த்தி கார்த்தி வெற்றி பெறுகிறார். படத்தின் முதல் காட்சியே, படத்தின் மையக்கருவான மட்டி ரேஸுடன் தொடங்குகிறது. ஒளிப்பதிவு, எடிட்டிங், பின்னணி இசை அனைத்துமே பிரமிக்க வைக்கின்றன. மட்டி ரேஸ் மட்டுமல்லாது, படத்தின் பல்வேறு திருப்புமுனைகள் பார்வையாளர்களை படம் முழுக்க சுவாரஸ்யமாகவே வைத்திருக்க உதவுகின்றன.

கார்த்தி மற்றும் முத்து ஆகிய இரண்டு கேரக்டர்களை சுற்றியே கதை கட்டமைக்கப்பட்டுள்ளது. முதல் பாதி முழுவதும் பார்வையாளர்களுக்கு ஆக்‌ஷன் விருந்தளிக்கப்படுகிறது. 2வது பாதியில் ஏகப்பட்ட திருப்புமுனைகள், வாழ்வியல் எதார்த்தங்கள் என நகர்கிறது. மேலும், முத்து - கார்த்தி இடையேயான மோதல்கள், அவர்கள் எப்படி சண்டைக்காரர்கள் ஆனார்கள் என கதை பின்னப்பட்டிருக்கிறது. 

கரடுமுரடான மண் சாலை பந்தயத்தை ஒளிப்பதிவாளர் கேஜி ரதீஷ் அருமையாக காட்சிப்படுத்தியிருக்கிறார். சான் லோகேஷின் எடிட்டிங் கச்சிதம். இவர்களின் கடும் உழைப்பு, ரசிகர்களுக்கு சிறந்த 4x4 ரேஸிங்கை பார்த்த அனுபவத்தை கொடுக்கிறது. இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ள கேஜிஎஃப் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர், படத்திற்கு வலுசேர்க்கிறார். சண்டைப்பயிற்சியாளர் ரன் ரவியின் பயிற்சியில் சண்டை காட்சிகள் மிரட்டுகின்றன. 

இவர்கள் தவிர, யுவன் கிருஷ்ணா, ரிதான் கிருஷ்ணா, ரெஞ்சி பானிக்கர் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். சுரேஷ் அனுஷா, ஐ.எம்.விஜயன், ஹரீஷ் பேராடி, சுனில் சுகாதா, அமித் நாயர் ஆகியோரும் அவர்களது பணியை செவ்வனே செய்திருகின்றனர். ஒட்டுமொத்தமாக மட்டி திரைப்படம் ரசிகர்களுக்கு செம ட்ரீட்.
 

click me!