
தளபதி விஜய் நடிப்பில் தீபாவளியன்று வெளியான மெர்சல் தமிழில் ரிலீஸானது போலவே, தெலுங்கிலும் "அதிரிந்தி" என்ற பெயரில் டப் செய்து ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால், தமிழுக்கே சென்சார் கிடைக்காமல் பல்வேறு இடையூருக்கு தள்ளப்பட்டதால், தெலுங்கில் ஒரு வாரம் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.
அதன்படி இன்று ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 400 க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும், வட அமெரிக்காவில் நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் வெளியாகவிருந்தது.
நேற்று காலை அதிரிந்தி படத்துக்கு U/A சர்டிஃபிகேட் கிடைத்துவிட்டதாக வெளியான தகவலும் அதையே உறுதி செய்தது. ஆனால், நேற்று இரவு தேனாண்டாள் நிறுவனத்தின் எக்ஸிகியூடிவ் புரொடியூசர் அதிதி ரவிச்சந்திரன் ட்விட்டரில் அதிரிந்தி நாளை ரிலீஸாகவில்லை. ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறினார்.
தமிழில் ஏற்பட்டது போலவே தெலுங்கிலும் ஜி.எஸ்.டி, டிஜிட்டல் இந்தியா பற்றிய வசனங்களை நீக்கச் சொல்லி பிரச்சினை நடைபெற்றுவருவதாகத் தெரிகிறது. தமிழக சென்சார் போர்டு அனுமதித்ததைப் போல, தெலுங்கில் ஜி.எஸ்.டி. வசனங்களை அனுமதிக்கக் கூடாது என சென்சார் போர்டுக்கு கொடுக்கப்பட்ட அழுத்தமே அதிரிந்தி வெளியீட்டுக்கு தள்ளிப்போனதற்குக் காரணம் என ஆந்திரா மீடியா முழுக்கப் இதுதான் பிரேக்கிங்.
தமிழக மீடியாக்களில் ஜி.எஸ்.டி. - டிஜிட்டல் இந்தியா பற்றிய வசனங்கள் தெலுங்குப் பதிப்பில் நீக்கப்பட்டுவிட்டதாகவே செய்திகள் நேற்றுமுதலே வெளியானது. தமிழக பாஜக சார்பில் மெர்சலுக்கு இலவச விளம்பரம் கொடுக்கப்பட்டதால் படம் சக்கைபோடு போட்டது, திரைப்படத்துக்கு இருந்த எதிர்பார்ப்பு, ஏக்கம் எல்லாவற்றையும் முதல் நாள் ஓப்பனிங் தீர்த்துவிட்டது.
அதையடுத்து. மெர்சல் இனி எத்தனை தியேட்டர்களில் எத்தனை மொழிகளில் ரிலீஸ் ஆனாலும் தமிழ் ரசிகர்கள் மட்டுமே இனி பார்ப்பார்கள் என்பதால் மற்ற நாடுகளில் அடுத்த வாரமே படத்தை தூக்க நேரிடும்...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.