'ஆதிபுருஷ்' படத்தில் ராமராக நடிக்கும் பிரபாஸின் சீதை இவர் தான்! படக்குழு வெளியிட்ட தகவல்!

Published : Mar 12, 2021, 02:00 PM IST
'ஆதிபுருஷ்' படத்தில் ராமராக நடிக்கும் பிரபாஸின் சீதை இவர் தான்! படக்குழு வெளியிட்ட தகவல்!

சுருக்கம்

 நயன்தாரா, அனுஷ்கா, தீபிகா படுகோனே, கீர்த்தி சுரேஷ்,  ஆகியோர் பெயர் பரவலாக அடிபட்டு வந்த நிலையில், தற்போது நாயகி குறித்த தகவலை படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.

தெலுங்கில் முன்னணி ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் பிரபாஸ், பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகம் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தார். இதன் மூலம் இளம் பெண்களின் கனவு நாயகனாக வலம் வர ஆரம்பித்தார். பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸுக்கு ரசிகர்களை விட ரசிகைகள் பட்டாளம் அதிகரித்துவிட்டது. தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை மிஞ்சும் அளவிற்கு அவருடைய அடுத்த படத்திற்கு சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பிரபாஸின் 22வது படமான 'ஆதிபுருஷ்' படத்தை, ஓம் ராவத் என்பவர் இயக்கி வருகிறார்.  ராமாயணத்தை கதை களமாக கொண்டு எடுக்கப்பட உள்ள இந்த படத்தில் ராமராக பிரபாஸ் நடிக்கிறார்.  ராவணனாக, சையது அலி கான் நடித்து வருகிறார். 3 டி தொழில்நுட்பத்தில் உருவாக உள்ள இந்த திரைப்படம் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கில் உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாக உள்ளது. 

மேலும் செய்திகள்: 'ஈஷா' சிவராத்திரி கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட சமந்தா - ரகுல் ப்ரீத் சிங்! வைரலாகும் புகைப்படங்கள்!
 

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கப்பட்ட நிலையில், ராமராக நடிக்கும் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க உள்ள நடிகை யார் என்று பல தகவல் வெளியாகியது. நயன்தாரா, அனுஷ்கா, தீபிகா படுகோனே, கீர்த்தி சுரேஷ்,  ஆகியோர் பெயர் பரவலாக அடிபட்டு வந்த நிலையில், தற்போது நாயகி குறித்த தகவலை படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்: எஸ்.பி.ஜனநாதனுக்கு மூளைச்சாவு? அவசர அவசரமாக மருத்துவமனை விரைந்த விஜய்சேதுபதி! தற்போதைய நிலவரம் என்ன?
 

பிரபல தெலுங்கு நடிகை கீர்த்தி சனோன் இந்த படத்தில் சீதை கேரக்டரில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கீர்த்தி சனோன் தனது டுவிட்டர் பக்கத்தில் ’ஒரு மிகப்பெரிய பயணம் தொடங்க இருப்பதாகவும் ’ஆதிபுருஷ்’ படத்தில் உள்ள சீதை கேரக்டரில் நடிப்பதில் பெருமை படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பூஷண் குமார் தயாரிப்பில் உருவாகி வரும் ’ஆதிபுருஷ்’ படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வெளியாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிரஜனுக்கு சம்பளத்தை கிள்ளி கொடுக்காமல் அள்ளிக் கொடுத்த பிக் பாஸ்... அடேங்கப்பா இத்தனை லட்சமா?
ஓவர் பில்டப்போடு வந்து புஸ்ஸுனு முடிந்த புதுச்சேரி மாநாடு..! விஜய் பேசியது என்ன? தளபதியின் முழு ஸ்பீச் இதோ