பிரபல இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனுக்கு மூளைச்சாவு... அதிர்ச்சியில் திரையுலகம்..!

Published : Mar 12, 2021, 10:37 AM IST
பிரபல இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனுக்கு மூளைச்சாவு... அதிர்ச்சியில் திரையுலகம்..!

சுருக்கம்

எஸ்.பி.ஜனநாதனுக்கு திருமணமாகவில்லை. அவர் தனது உதவியாளர்களுடன் வசித்து வருகிறார்.   

தேசிய விருது பெற்ற பிரபல இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் உடல்நலக்குறைவால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இயற்கை படத்தின் மூலம் இயக்குநரானவர் எஸ்.பி.ஜனநாதன். ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடைமை’என பல்வேறு சமூக பிரச்னைகளை மையப்படுத்திய படங்களை இயக்கியுள்ளார்.

தற்போது அவர் ‘லாபம்’என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்நிலையில் இதன் எடிட்டிங் பணியில் இருந்த ஜனநாதன் நேற்று மதியம் சாப்பிடுவதற்கு வீட்டிற்கு சென்றுள்ளார். மணி 3.30 ஆகியும் அவர் திரும்பாததால், அவரது உதவியாளர்கள் வீட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது கதவு திறந்திருக்க, சுயநினைவின்றி ஜனநாதன் மயங்கி கிடந்திருக்கிறார். அதிர்ச்சியடைந்த உதவியாளர்கள், அவரை மீட்டு கிரீம்ஸ் ரோட்டிலுள்ள பிரபல மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இதையடுத்து எஸ்.பி.ஜனநாதனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் எந்த முன்னேற்றமும் இல்லாமல், ஜனநாதனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. எஸ்.பி.ஜனநாதனுக்கு திருமணமாகவில்லை. அவர் தனது உதவியாளர்களுடன் வசித்து வருகிறார். 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நிவேதா பெத்துராஜ் - ரஜித் திருமணம் நிறுத்தம்? இன்ஸ்டாவில் போட்டோஸை நீக்கியதால் டவுட்டோ டவுட்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஹைலைட்ஸ்: ராஜீ முதல் தங்கமயில் வரை இன்றைய அப்டேட்ஸ்!