
நடிகை தமன்னா திரையுலகில் காலடி எடுத்து வைத்து, கிட்ட தட்ட 15 வருடங்கள் ஆகும் நிலையில், சமீப காலமாக முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக படங்கள் நடிப்பதை விட, நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டுமே அதிகம் தேர்வு செய்து நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
இவர் நடிப்பில் தமிழில் கடைசியாக ’ஆக்சன்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகியது. இதில் தமன்னா சண்டை காட்சியில் அசால்ட் செய்திருந்தாலும், படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை.
இந்நிலையில், பாலிவுட்டில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'அந்தாதூன்' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க, நடிகை தமன்னா ஒப்பந்தமாகியுள்ளார்.
இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள அதகவலில் தபு வேடத்தில் தமன்னாவும், ஆயுஷ்மான் வேடத்தில் நிதினும், ராதிகா ஆப்தே வேடத்தில் நபா நடேஷ் ஆகியோர்களும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த படத்தை மெர்லபகா காந்தி இயக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் விரைவில் இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் நடிகர் பிரசாந்த் நடிப்பில் இந்த படம் உருவாக உள்ளது. இந்த படத்தை மோகன் ராஜா இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.