
நடிகை சுஜா வருணி, தமிழ் திரையுலகத்தில் நடிகையாக ஜொலிக்க முடியாவிட்டாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடியதன் மூலம், பிரபலமானார். இவர் ஓவியா போல் நடந்து கொள்ள முயற்சி செய்தார் என்கிற காரணத்தை பலர் முன்வைத்ததால், பிக்பாஸ் இறுதி நாட்களில் திடீர் என வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில், சுஜா வருணி கடந்த ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின், பேரன் சிவக்குமாரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது கர்ப்பமாக இருக்கும் அவர், அடிக்கடி தன்னுடைய கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் போன்றவற்றை வெளியிட்டு, தங்கள் இருவரின் இடையே உள்ள காதலை வெளிப்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய கணவருடன் இணைந்து எடுத்துக்கொண்ட ஹாட் போட்டோஷூட் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். "இது குறித்து அவர் பதிவிட்டுள்ள பதிவில், இது தன்னுடைய ஃபேவரட் புகைப்படங்கள். இவை அனைத்தும் உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். இந்த புகைப்படங்களை விவரிக்க வார்த்தைகள் தேவையில்லை. இது நான் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளேன் என்பதை வெளிப்படுத்துகிறது. இது தன்னுடைய 12 வருட காதலுக்கு காண சாட்சி என பதிவிட்டுள்ளார்.
சுஜா வருணி, தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.