
மத்திய, மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கவும், கொரோனா பாதிப்பிலிருந்து, மக்களை மீட்க போர்க்கால நடவடிக்கையாக 21 நாள் ஊரடங்கு உத்தரவை அமல் படுத்தியுள்ளது.
இந்நிலையில், மக்களிடம் கொரோனா சார்ந்த விழிப்புணர்வை, தூண்டும் விதமாக கட்டில் திரைப்படக்குழு,
"கொரோனா விழிப்புணர்வு கவிதைப்போட்டி"யை அறிவித்திருக்கிறது.
12 வரிகளுக்கு மிகாமல் கவிதை எழுதி, kattiltamilfilm@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இதில் பங்கெடுப்பவர்கள் அனுப்பலாம் என்றும், தேர்வுக்குழுவின் முடிவே இறுதியானது என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் எந்த நாடுகளிலிருந்தும், அனைத்து வயதினரும், இந்த போட்டியில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல கவிஞர்களை கொண்டு தேர்ந்தெடுக்கப்படும் சிறப்பான கவிதைகளுக்கு, விரைவில் நடைபெற இருக்கும் கட்டில் திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் பரிசு தொகை காசோலையாக வழங்கப்படும் என்று கட்டில் திரைப்படத்தின் கதாநாயகி சிருஷ்டி டாங்கே தெரிவித்திருக்கிறார்.
மேலும் முதல் பரிசாக, ரூ .25,௦௦௦, இரண்டாம் பரிசு : 15,௦௦௦ மூன்றாம் பரிசு : 10,௦௦௦, ஆறுதல் பரிசு : 20 பேருக்கு கவிதை நூல்கள் வழங்கப்பட உள்ளது. மற்றும் சிறந்த 100 கவிதைகள் தொகுக்கப்பட்டு நூலாக வெளியிடும் திட்டம் இருப்பதாக இந்த படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இ.வி.கணேஷ்பாபு இயக்கி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு பி.லெனின் கதை திரைக்கதை வசனம் எழுதி எடிட்டிங் செய்கிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்களை வைரமுத்து- மதன் கார்க்கி ஆகியோர் எழுதுகிறார்கள்.
ஒளிப்பதிவை வைட்ஆங்கிள் ரவிசங்கர் கையாளுகிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.