நடிகை சோனியா அகர்வாலுக்கு இரண்டாவது திருமணமா? தாலிகாட்டும் வீடியோவை வெளியிட்டதால் பரபரப்பு!

Published : Jul 23, 2020, 01:31 PM ISTUpdated : Jul 23, 2020, 01:36 PM IST
நடிகை சோனியா அகர்வாலுக்கு இரண்டாவது திருமணமா? தாலிகாட்டும் வீடியோவை வெளியிட்டதால் பரபரப்பு!

சுருக்கம்

பிரபல நடிகையும், இயக்குனர் செல்வராகவனின் முன்னாள் மனைவியுமான சோனியா அகர்வால், தாலி காட்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளதால், அவர் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள போகிறாரா என்கிற கேள்வியுடன், இவருக்கு தொடர்ந்து பலர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.  

பிரபல நடிகையும், இயக்குனர் செல்வராகவனின் முன்னாள் மனைவியுமான சோனியா அகர்வால், தாலி காட்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளதால், அவர் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள போகிறாரா என்கிற கேள்வியுடன், இவருக்கு தொடர்ந்து பலர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: சூர்யா பிறந்தநாள் ஸ்பெஷல்... அஜித்துடன் சைக்ளிங்... அதிகம் பார்த்திடாத அரிய புகைப்படங்கள்!
 

தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி பின்னர், தமிழில் இயக்குனர் செல்வராகவன் இயக்கிய 'காதல் கொண்டேன்' படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் நடிகை சோனியா அகர்வால். முதல் படத்திலேயே இந்த படத்தின் இயக்குனர் செல்வராகவனுக்கும், சோனியா அகர்வாலுக்கு காதல் தீ பற்றியது. ஆனால் இதனை அவர்கள் உடனடியாக வெளிப்படுத்தவில்லை என்றாலும், தொடர்ந்து இருவரை சுற்றியும் சில காதல் கிசுகிசு எழுந்தவண்ணம் இருந்தது.

ஆனால் அதனை பொருட்படுத்தாத சோனியா அகர்வால், இந்த படத்தை தொடர்ந்து, 7 ஜி ரெயின்போ காலனி, மதுர, கோவில், திருட்டு பயலே என தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்தார். புதுப்பேட்டை படத்திற்கு பின், இருவரும் தங்களுடைய காதலை வெளிப்படுத்தி பெற்றோர் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டனர்.

மேலும் செய்திகள்: மாஸ்க் போட்டு கொண்டு நண்பர்களுடன் ஜாலியாக உலா வரும் தளபதி விஜய்! வைரலாகும் புகைப்படம்!
 

2006 ஆம் ஆண்டு செல்வராகவனை திருமணம் செய்து கொண்ட பின், சோனியா அகர்வால் திரைப்படங்கள் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களது குடும்ப வாழ்க்கையில் சில கருத்து வேறுபாடு ஏற்படவே இருவரும் 2010 ஆம் ஆண்டு முறையாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

பின்னர் இயக்குனர் செல்வராவான் 2011 ஆம் ஆண்டு, மயக்கம் என்ன படத்தில் துணை இயக்குனராக பணியாற்றிய கீதாஞ்சலியை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்த்து வருகிறார். ஆனால் சோனியா அகர்வால், மீண்டும் சில திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடிக்க துவங்கினார்.

மேலும் செய்திகள்: கையில் மது கோப்பையுடன்... நெருக்கமாக அமர்ந்திருக்கும் ஆண் நபர் யார்? கழுவி ஊற்றியவர்களுக்கு வனிதா பதிலடி!
 

கடந்த 10 வருடமாக திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வரும் சோனியா அகர்வால், தற்போது திடீர் என, அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தாலி கட்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் 3 நாட்கள் காத்திருங்கள் என்றும் கூறியுள்ளார். சோனியா அகர்வால் திடீர் என தாலி கட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளதால், அவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள போகிறாரா? என்கிற சந்தேகத்திலேயே இவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

அதே நேரத்தில், மற்ற சிலரோ... இது இவர் நடிக்கும் சீரியல் அல்லது படத்தில் ப்ரோமோஷனுக்காக இப்படி ஒரு வீடியோவை போட்டிருக்கலாம் என கூறிவருகிறார்கள். இரண்டில் எது உண்மை என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

வைரலாகி வரும் வீடியோ இதோ...

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது: அமலா உருக்கம்!
பெத்த மகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியை காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்த சாமுண்டீஸ்வரி!