
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த "துள்ளுவதோ இளமை" படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஷெரின். முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்த ஷெரின், அதற்கு அடுத்து ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில் போன்ற படங்களில் நடித்தார். அதன் பின்னர் பெரிதாக பட வாய்ப்புகள் அமையவில்லை. இந்நிலையில் திடீரென பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக தோன்றிய ஷெரின் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
ஸ்லீம்மாக இருந்த ஷெரின், ஓவர் வெயிட் போட்டு குண்டானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அடையாளமே தெரியாத அளவிற்கு குண்டாக இருந்த ஷெரின், கடுமையாக உடற்பயிற்சிகள் செய்து படிப்படியாக உடல் எடையை குறைக்க ஆரம்பித்தார். அதற்கு கைமேல் பலனாக மீண்டும் ஹீரோயின் லுக்கிற்கு மாறினார்.
நச்சுன்னு ஸ்லீம்மான அப்புறம் சும்மா இருந்தால் எப்படி என தினம், தினம் மார்டன் டிரஸ், புடவை என விதவிதமான காஸ்டியூமில் அசத்தல் போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். வாவ்...! சொல்ல வைக்கும் ஷெரினின் அந்த அசத்தல் லுக் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவிக்கிறது.
தற்போது பொங்கல் விருந்தாக பிங்க் நிற பட்டுப்புடவையில், தலை நிறைய மல்லிகை பூ வைத்து சும்மா கும்முனு இருக்கும் ஷெரினின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மீண்டும், மீண்டும் பார்க்கத் தூண்டும் ஷெரினின் அட்டகாசமான புகைப்படங்கள் இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.