
நடிகர் விஜய்யை நேரில் பார்க்க சென்ற போது தன் கணவர் தடுத்து தன்னை கீழே தள்ளி விட்டதாக நடிகையை செந்தில்குமாரி தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமாக உள்ள ஹீரோ விஜய். தற்போது அவருடைய அறுபத்து மூன்றாவது படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படத்தை அட்லி இயக்குகிறார். இந்த படத்தில் கால்பந்து பயிற்சியாளராக விஜய் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. இவருடன் நயன்தாரா டேனியல் பாலாஜி விவேக் போன்றவர்களும் நடித்துள்ளனர்.
இந்நிலையில் குணசித்திர நடிகையான நடிகை செந்தில் குமாரி திருப்பாச்சி படப்பிடிப்பின்போது விஜய்யை நேரில் பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டு தன் வீட்டிலிருந்து கிளம்பும் போது தன்னுடைய கணவர், விஜயை பார்க்க செல்ல கூடாது என சண்டையிட்டு ஆத்திரத்தில் என்னை கீழே தள்ளினார்.
அப்போது என் தலையில் காயம் ஏற்பட்டது என அவருடைய பழைய நினைவை பகிர்ந்துள்ளார். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கூட நான் விஜய்யை பார்க்க சென்றேன் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.