நடிகை சமந்தாவுக்கு கொரோனாவா? ... கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த தோழிக்கு தொற்று உறுதியானதால் அதிர்ச்சி...!

இந்நிலையில் ஷில்பாவிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரே தெரிவித்துள்ளார். 

Actress Samantha Bestie Shipa Reddy Tests Positive For Coronavirus

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, கொரோனா பிரச்சனையின் காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கில், சமையல் மற்றும் வீட்டில் முட்டைகோஸ், மற்றும் கீரைகள் போன்றவற்றை வளர்த்து, அறுவடை செய்து வருகிறார். இது குறித்த புகைப்படங்களையும் அவ்வபோது, சமந்தா வெளியிட்டு வருவதும், இதற்கு அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருவதும் அனைவரும் அறிந்தது தான்.

Actress Samantha Bestie Shipa Reddy Tests Positive For Coronavirus

Latest Videos

 

இதையும் படிங்க: 

லாக்டவுன் நேரத்தில் படப்பிடிப்புகல் இல்லாததால் கணவர், குடும்பம், செல்ல நாய்குட்டி என ஜாலியாக பொழுதைக் கழித்து வருகிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா அவ்வப்போது தனது போட்டோஸையும் பகிர்ந்து வருகிறார். அப்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு சமந்தா, தனது நெருங்கிய தோழியும், பேஷன் டிசைனருமான ஷில்பா ரெட்டிக்கு கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுப்பது போன்ற போட்டோவை ஷேர் செய்திருந்தார். 

 

இதையும் படிங்க: கொழு கொழுன்னு இருந்த வித்யுலேகா ராமனா இது?... 30 கிலோ வரை எடையை அசால்டாக குறைத்து ஆளே மாறிட்டாரே....!

இந்நிலையில் ஷில்பாவிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரே தெரிவித்துள்ளார். இதனால் சமந்தாவின் ரசிகர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு தான் சமந்தா அவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். அதுமட்டுமல்ல தோழியின் வீட்டிற்கு சென்ற சமந்தா செல்ல நாயுடனும் கொஞ்சி விளையாடினார். இதனால் சமந்தாவிற்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்குமா? என்ற கவலையில் ரசிகர்கள் ஆழ்ந்துள்ளனர். 

vuukle one pixel image
click me!
vuukle one pixel image