மருந்து வாங்க போறீங்களா?... இதை கண்டிப்பாக கவனியுங்கள்... ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் வைத்த கோரிக்கை....!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 23, 2020, 6:50 PM IST
Highlights

லாக்டவுன் நேரத்தில் மருந்து வாங்க செல்பவர்களுக்கு நடிகர் சத்யராஜின் மகளான மருத்துவர் திவ்யா சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். அந்த முக்கியமான விஷயத்தை தனது ரசிகர்கள் பயன்பெறும் வகையில் சிவகார்த்திகேயன் பகிர்ந்துள்ளார்.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில் திரைத்துறை பிரபலங்கள் பலரும் தங்களது ரசிகர்களுக்கு பல்வேறு கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். முகக்கவசம், கை கழுவுதலின் அவசியம், சமூக இடைவெளி உள்ளிட்டவை குறித்து விதவிதமாக வீடியோக்களை வெளியிட்டு விழிப்புணர்வு பரப்பி வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

 

இதையும் படிங்க:  நடுரோட்டில் வைத்து நயன்தாராவிற்கு முத்தம் கொடுத்த விக்னேஷ் சிவன்... வைரலாகும் புகைப்படம்...!

லாக்டவுன் நேரத்தில் மருந்து வாங்க செல்பவர்களுக்கு நடிகர் சத்யராஜின் மகளான மருத்துவர் திவ்யா சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். அந்த முக்கியமான விஷயத்தை தனது ரசிகர்கள் பயன்பெறும் வகையில் சிவகார்த்திகேயன் பகிர்ந்துள்ளார். 'லாக்டவுன் காலத்தில் மருந்து கடைகளுக்கு வரவேண்டிய சப்ளை வராமல் இருக்கலாம். வெளியூர்களிலும், வெளிநாடுகளிலிருந்தும் வர வேண்டிய மருந்துகள் லாக்டவுனால் மருந்துக் கடைக்கு வந்து சேர முடியாது. அதனால் சில மருந்து கடைகளில் பழைய மருந்துகள் இருப்பு இருக்கலாம். மக்கள் அனைவரும் இந்த நேரத்தில் வாங்கும் மருந்துகளின் காலாவதி தேதியை கவனமாக பார்த்த பின்னரே வாங்க வேண்டும். குறிப்பாக, குழந்தைகளுக்கு வாங்கும் பால் பவுடர், க்ரீன், ஷாம்பூ, பேபி ஆயில் போன்ற அனைத்து பொருட்களின் காலாவது தேதியை பார்த்து வாங்குவது மிக மிக அவசியம். காலாவதியான மருந்துகளை உபயோகிப்பதால் உடலில் பல உபாதைகள் வரலாம்.

 

இதையும்  படிங்க: கொழு கொழுன்னு இருந்த வித்யுலேகா ராமனா இது?... 30 கிலோ வரை எடையை அசால்டாக குறைத்து ஆளே மாறிட்டாரே....!

மருந்து கடை வைத்திருப்பவர்களுக்கும் ஒரு வேண்டுகோள். மக்கள்  அனைவரும் கஷ்டப்பட்டு சம்பாதித்து சேர்த்து வைத்த காசில்தான் மருந்து வாங்க வருகிறார்கள். அவர்கள் வாங்கும் மருந்து அவர்களை குணப்படுத்தும் என்ற நம்பிக்கையில்தான் வாங்குகிறார்கள். தயவு செய்து உங்கள் கடைகளில் காலாவதியான மருந்துகளை டிஸ்போஸ் செய்ய ஒரு சிஸ்டம் அமைக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார். 

 

இதையும் படிங்க: 

இதை பதிவிட்டுள்ள சிவகார்த்திகேயன், மருந்து வாங்க செல்லும் போது கவனிக்க வேண்டிய விழிப்புணர்வு  குறித்து ஊட்டச்சத்து நிபுணரும், நடிகர் சத்யராஜ் மகளுமான திவ்யா கூறியுள்ள முக்கியமான விஷயங்களை படியுங்கள்,ஷேர் செய்யுங்கள் என குறிப்பிட்டுள்ளார். 
 

click me!