
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித் இருவரது ரசிகர்களும் சோசியல் மீடியாவில் எலியும், பூனையுமாக சண்டையிட்டு வருகின்றனர். தன்னம்பிக்கையால் உயர்ந்த அஜித்தும், என்ன தான் வாரிசாக இருந்தாலும் பல சவால்களை கடந்து கடின உழைப்பால் வென்ற விஜய்யும் எப்போதும் கோலிவுட்டுக்கு கிடைத்த ஈடு இணையில்லாத பொக்கிஷங்கள் தான். தல, தளபதி இருவரும் என்ன தான் நண்பர்களாக பழகி வந்தாலும் அவர்களது ரசிகர்களின் அலப்பறைகள் தான் கொஞ்சம் ஓவராக சென்று கொண்டிருக்கிறது. மற்ற திரை நட்சத்திரங்கள் எல்லாம் வந்து பஞ்சாயத்து செய்யும் அளவிற்கு ட்விட்டரில் கட்டி உருளுகின்றனர்.
இதையும் படிங்க: கொழு கொழுன்னு இருந்த வித்யுலேகா ராமனா இது?... 30 கிலோ வரை எடையை அசால்டாக குறைத்து ஆளே மாறிட்டாரே....!
நேற்று தளபதி விஜய்யின் 46வது பிறந்தநாளை ரசிகர்கள் ட்விட்டரில் தாறுமாறாக கொண்டாடினர். கொரோனா காரணமாக தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாட வேண்டாமென விஜய் உத்தரவிட்டதை அடுத்து ரசிகர்கள் இந்த முறை கொஞ்சம் அடங்கி வாசித்தனர். இருந்தாலும் வழக்கம் போல சோசியல் மீடியாவில் ஹேஷ்டேக்குகள் தாறுமாறாக ட்ரெண்டாகி வந்தது. அவரை வாழ்த்தி ரசிகர்களும், திரைத்துறை பிரபலங்களும் #HBDTHALPATHYVijay என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி தங்களது வாழ்த்துக்களை பதிவிட்டு வந்தனர். விஜய் பிறந்தநாள் அன்று ட்ரெண்டாகி வந்த அந்த ஹேஷ்டேக்கை பின்னுக்குத் தள்ளும் வேலையில் தல ரசிகர்கள் தீவிரமாக இறங்கினர்.
இதையும் படிங்க: நடுரோட்டில் வைத்து நயன்தாராவிற்கு முத்தம் கொடுத்த விக்னேஷ் சிவன்... வைரலாகும் புகைப்படம்...!
#NonPareilThalaAJITH என்ற புது ஹேஷ்டேக்கை உருவாக்கி அஜித் ரசிகர்கள் அதை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தனர், இதனால் விஜய் பிறந்த நாள் ஹேஷ்டேக் 4வது இடத்திற்கு தள்ளப்பட்டது. நேற்று முழுவதும் இரு ஹேஷ்டேக்குகளுக்கும் இடையே இழுபறி நீடித்து வந்த நிலையில், அஜித்தை அசால்டாக பின்னுத்தள்ளிவிட்டு விஜய் ஹேஷ்டேக் சாதனை படைத்துவிட்டது. அதாவது தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ட்விட்டரில் #HBDThalapathyVIJAY என்ற ஹேஷ்டாக்கில் 24 மணி நேரத்தில் 10.5 மில்லியன் ட்வீட் செய்துள்ளனர். இது அஜித் ரசிகர்கள் படைத்த முந்தைய சாதனையான 9 மில்லியன் சாதனையை முறியடித்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.