நள்ளிரவில் குடிபோதையில் போலீசாரை தாக்கிய நடிகை!

Published : Apr 02, 2019, 04:33 PM IST
நள்ளிரவில் குடிபோதையில் போலீசாரை தாக்கிய நடிகை!

சுருக்கம்

பிரபல மாடல் அழகியும், நடிகையுமான, ரூகி சிங் குடிபோதையில், போலீஸ்காரர்களை தக்கியதற்காகவும், விபத்தை ஏற்படுத்தியதற்காகவும்,அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.  

பிரபல மாடல் அழகியும், நடிகையுமான, ரூகி சிங் குடிபோதையில், போலீஸ்காரர்களை தக்கியதற்காகவும், விபத்தை ஏற்படுத்தியதற்காகவும்,அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மும்பை நடிகைகள் அடிக்கடி பிரச்சினைகளில் சிக்கும் சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் மார்ச் 31 ஆம்   தேதி தன்னுடைய நண்பர்களுடன் பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றிற்கு சென்ற நடிகை, குடி போதையில் ஓட்டல் ஊழியர்களிடம் தகராறு செய்துள்ளார்.

இதனால் ஹோட்டல் நிர்வாகம், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.  இதை அறிந்து அங்கு வந்த போலீசார்...  நடிகை ரூகி சிங் , அவரது நண்பர்கள் மற்றும் ஓட்டல் ஊழியர்கள் இடையே சமாதானம் செய்ய முயற்சி செய்துள்ளனர்.

அப்போது குடிபோதை தலைக்கேறிய நிலையில் இருந்த நடிகை ரூகி சிங் போலீஸ்காரர்களை இழுத்து அடித்துள்ளார். பின்னர் தன்னுடைய ஆண் நண்பர் வைத்திருந்த காரை எடுத்துச் சென்று சில வாகனங்கள் மேல் மோதி சேதப்படுத்தினார். 

நள்ளிரவில் இந்த சம்பவம் நடைபெற்றதால் போலீசார் அவரை கைது செய்யாமல், 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நண்பா இது நம்ம சர்க்கார்... தவெக பொதுக்கூட்டத்தில் கவனம் ஈர்த்த அஜித் பேனர் - வைரலாக்கும் தல - தளபதி ரசிகர்கள்
நான் அவள் இல்லை... காட்டுத்தீ போல் பரவிய ஏஐ போட்டோ - கடும் கோபத்தில் நிவேதா தாமஸ் வெளியிட்ட பதிவு