
பேரழகும் திறமையும் கொண்ட, ஆனால் ராசியில்லா நடிகை என்று பெயரெடுத்த ரிச்சா கங்கோபாத்தியாய் தனது வெளிநாட்டுக் காதலரை விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். இத்தகவலை தனது முகநூல் பக்கத்தில் அவரே வெளியிட்டிருக்கிறார்.
தெலுங்கில் ‘லீடர்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான ரிச்சா தமிழில் தனுஷுடன் ‘மயக்கம் என்ன’ சிம்புவுடன் ‘ஒஸ்தி’ என்ற இரண்டே படங்களில் நடித்தார். இதில் ‘மயக்கம் என்ன’ படத்திற்காக நிறைய பாராட்டுகளும் விருதுகளும் பெற்றார். ஆனால் அந்த இரு படங்களின் மூலம் கிடைத்த கசப்பான அனுபவங்களால் தமிழ்த் திரையுலகை விட்டுத் தப்பி ஓடி ஒன்றிரண்டு பெங்காலிப் படங்களில் நடித்த கையோடு திரையுலகுக்கே முழுக்குப் போட்டார்.
பின்னர் வாஷிங்டன் யுனிவர்சிட்டியில் உள்ள ஒலின் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் எம்.பி.ஏ. படிக்கத்துவங்கினார். அந்த படிப்பின்போது சந்தித்த ஜோ லெங்கல்லா என்பவருடன் காதல் வசப்பட்ட ரிச்சா தற்போது மிக விரைவில் அவரையே திருமணம் செய்துகொள்ளப் போவதாக அறிவித்திருக்கிறார்.
இந்தத் திருமணத்துக்கு தனுஷ், சிம்பு, செல்வராகவன் ஆகிய மூன்றுபேருக்குமே அழைப்பிதழ் வராது என்கிற ஒரு தகவலை மட்டும் இப்போதே அடித்துக்கூறலாம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.