Rashmika Mandanna : "அனிமல்" பட வீடியோ.. சர்ச்சையை கிளப்பிய இணையவாசி - நேஷனல் க்ரஷ் கொடுத்த நச் ரிப்ளை!

By Ansgar R  |  First Published Jun 14, 2024, 5:56 PM IST

Actress Rashmika Mandanna : கலையுலகில் பயணிக்க துவங்கி வெறும் 8 ஆண்டுகள் தான் ஆகிறது என்றாலும், இன்று இந்தியாவின் நேஷனல் க்ரஷ் என்ற பட்டதோடு வலம்வரும் நடிகை தான் ராஷ்மிக்கா.


கர்நாடகாவில் கடந்த 1996 ஆம் ஆண்டு பிறந்த பிரபல நடிகை தான் ராஷ்மிகா மந்தானா, பெங்களூரில் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த அவர் அழகி போட்டிகளில் பங்கேற்க தொடங்கினார். அதன் விளைவாக கடந்த 2015 ஆம் ஆண்டு அவர் பங்கேற்ற ஒரு அழகி போட்டியில் அவர் வெற்றி பெற்றதையடுத்து, இயக்குனர் ரிஷப் செட்டி அவர்களின் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 

அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட ராஸ்மிகா மந்தானா, தொடர்ச்சியாக கன்னட மொழி திரைப்படங்களில் நடிக்க தொடக்கிறார். அதன் பிறகு தெலுங்கு மொழியிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இந்த சூழலில் கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழில் பிரபல நடிகர் கார்த்தி நடிப்பில், பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் வெளியான "சுல்தான்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார்.

Latest Videos

Mic Mohan: ரசிகையின் தாலியை பார்த்து மெய் சிலிர்த்து போன மோகன்! எந்த கணவர் இப்படி சொல்லுவார்?

அதன் பிறகு தமிழில் தளபதி விஜயுடன் அவர் நடித்த "வாரிசு" திரைப்படம் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக மாறியது. தொடர்ச்சியாக தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி என்று பல மொழிகளில் அசத்தி வரும் ராஷ்மிகா மந்தானா இன்று இந்திய சினிமா ரசிகர்களால் விரும்பப்படும் நேஷனல் கிரஷ் என்கின்ற அந்தஸ்துக்கு சென்றிருக்கிறார்.

ஒரு படத்திற்கு மூன்று முதல் ஐந்து கோடி ரூபாய் வரை சம்பளமாக பெறுகிறார் அவர். இறுதியாக பாலிவுட் உலகில் வெளியான "அனிமல்" என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்த ராஷ்மிகா நடிப்பில் புஷ்பா 2, ரெயின்போ, சாவா, குபேரா, தி கேர்ள் பிரண்ட் என்று பல திரைப்படங்கள் தொடர்ச்சியாக உருவாகி வருகிறது. 

Remember nothing is scarier than trusting a man..
pic.twitter.com/DEAw6Dxhlf

— Falena🦋 (@_ivsfa8)

இந்த சூழலில் ட்விட்டர் தளத்தில் அனிமல் படத்தில் வரும் ஒரு காட்சியை வெளியிட்டு, 
பெண்களுக்கு இருக்கும் பெரும் பயமே ஆண்களை நம்புவது தான்" என்று ஒரு இணையவாசி பதிவு ஒன்றே வெளியிட, அதற்கு பதில் அளித்த ராஷ்மிகா மந்தானா, அனைத்து ஆண்களும் அப்படி அல்ல, அவர்களில் நல்லவர்களும் பலர் இருக்கின்றார்கள். அவர்களை நம்புவது அழகானது என்று கூறியுள்ளார். 

Kannappa Teaser: பாகுபலி படத்துக்கே சவால் விடும் போலயே..! விஷ்ணு மஞ்சு நடித்துள்ள 'கண்ணப்பா' டீஸர் வெளியானது!

click me!