கொரோனா ஊரடங்கு: 200 குடும்பங்களுக்கு உணவளிக்கும் பிரபல நடிகை...!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 4, 2020, 1:10 PM IST
Highlights

  அப்படி ஒரு உன்னதமான சேவைக்காக களத்தில் குதித்துள்ளார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அடுத்து என்ன நடக்கும் என்று கணிக்க முடியாத அளவிற்கு கொரோனாவின் கோர தாண்டவம் உள்ளது. சமூக விலகல் ஒன்றே தற்போதைய நெருக்கடி நிலையை சமாளிக்க சரியான வழி என்பதால், இந்தியாவில் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: கனவில் கூட கசமுசாவா?.... ஆண் நண்பருடன் நெருக்கமாக ஆட்டம் போட்ட மீரா மிதுனை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்...!

தினக்கூலி தொழிலாளர்களை அதிகம் கொண்ட இந்தியாவில் 144 தடை உத்தரவை செயல்படுத்துவது மிகப்பெரிய சவாலாகவே உள்ளது. இருப்பினும் மத்திய, மாநில அரசுகள் மக்களின் உயிரை காக்கும் பொருட்டு சூறாவளி வேகத்தில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அரசு மட்டுமே உதவ வேண்டும் என்ற நிலையை தாண்டி, பல தன்னார்வலர்கள் தங்களது உயிரை பற்றி கூட கவலைப்படாமல் களத்தில் இறங்கியுள்ளனர். 

இதையும் படிங்க: 

வீடுகள் இன்றி தெருக்களில் கஷ்டப்படும் ஆதரவற்றவர்களுக்கும், ஏழை எளிய மக்களும் பலரும் தங்களது வீட்டில் உணவு சமைத்து, அவர்கள் இருக்கும் இடத்திற்கே தேடிச்சென்று கொடுத்து உதவுகின்றனர். அப்படி ஒரு உன்னதமான சேவைக்காக களத்தில் குதித்துள்ளார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

இதையும் படிங்க: ச்சீ...இன்னம் என்ன கன்றாவி எல்லாம் பார்க்க வேண்டி வருமோ...ஊரடங்கில் இவங்க பண்ற அட்டகாசத்தை நீங்களே பாருங்க...!

நடிகைகளுக்கு சமூக பொறுப்புணர்வு கிடையாது. கோடி, கோடியாக சம்பாதித்தாலும் கொரோனா நிவாரணத்திற்காக கூட ஒரு ரூபாய் கூட தரவில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் ரகுல் ப்ரீத் சிங், தான் வசிக்கும் டெல்லியில் உள்ள குர்கான் நகரில் தினமும் 200 பேருக்கு இரண்டு வேளை உணவழித்து வருகிறார். மேலும் ஊரடங்கு காலம் முடியும் வரை தனது சேவையை தொடர்வேன் என்றும் உறுதியாக தெரிவித்துள்ளார். 

click me!