
1980களில் திரையுலகில் முன்னணி நடிகர், நடிகைகளாக இருந்த தென்னிந்திய திரைபிரபலங்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்களின் ரீ-யூனியன் நிகழ்ச்சி மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு, கடந்த வாரம் மும்பையில் நடந்தது. இதில் பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான பூனம் தில்லான் மற்றும் ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் நான்கு தென் மாநிலங்களைச் சேர்ந்த நடிகர்களுக்கு விருந்தளித்து உபசரித்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் இந்த ரீ யூனியன் நிகழ்ச்சியின் போது ஒரே நிறத்தின் உடை அணிந்து அந்த நாளை, குதூகலமாக கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ள நிலையில், இந்த ஆண்டு சில்வர் மற்றும் ஆரஞ்சு நிற உடையில் நடிகர் நடிகைகள் ஜொலித்தனர். இந்த நிகழ்ச்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மகாராஷ்டிர மற்றும் உள்ளூர் ஸ்பெஷல் உணவு வகைகள் ஏற்பாடு செய்யப்பட்டு...நாள் முழுவதும் ஆட்டம் பாட்டம் என களைகட்டியது நிகழ்ச்சி.
தைரியமாக உண்மையை சொன்ன ராமமூர்த்தி... சிக்கிய கோபி? சூடான ராதிகா... பரபரக்கும் பாக்கியலட்சுமி தொடர்!
விடிய விடிய நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், விளையாட்டு மற்றும் வினாடி வினா உள்ளிட்டவைக்கு பூனம் தில்லான் ஏற்பாடு செய்திருந்தார். நட்பு, தோழமை, வேடிக்கை நிறைந்த மாலைப் பொழுதாக ரீயூனியன் அமைந்திருந்தது. பிரமாண்டமாக நடந்த இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் ராஜ்குமார், சரத்குமார், சிரஞ்சீவி, பாக்யராஜ், வெங்கடேஷ், அர்ஜுன், ஜாக்கி ஷெராஃப், அனில் கபூர், சன்னி தியோல், சஞ்சய் தத், நரேஷ், பானுச்சந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
OTT Release This Week: இந்த வாரம் ஓடிடி ரிலீசுக்கு வரிசை கட்டிய சூப்பர் ஹிட் படங்கள்!
அதே போல் நடிகைகள் சுஹாசினி, குஷ்பூ, ரம்யா கிருஷ்ணன், லிஸ்ஸி, பூர்ணிமா, ராதா, அம்பிகா, சரிதா, சுமலதா, ஷோபனா, ரேவதி, மேனகா, பூனம் தில்லான், நதியா, ராதா, அம்பிகா பத்மினி கே, வித்யா பாலன், டினா அம்பானி, மீனாட்சி சேஷாத்திரி, மது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நடிகை ராதா தன்னுடைய 57 வயதிலும் நளினமான நடன அசைவுகளை வெளிப்படுத்தும் விதமாக டான்ஸ் ஆடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.