நடிகை பிரியாமணிக்கு இப்படி ஒரு நிலையா...? வருந்தும் ரசிகர்கள்..!

 
Published : Jun 30, 2018, 05:26 PM ISTUpdated : Sep 19, 2018, 02:35 AM IST
நடிகை பிரியாமணிக்கு இப்படி ஒரு நிலையா...? வருந்தும் ரசிகர்கள்..!

சுருக்கம்

actress priyamani turn to web seriyal

'பருத்திவீரன்' படத்தில் முத்தழகி கதாப்பாத்திரமாகவே வாழ்ந்து நடித்திருந்தவர் நடிகை பிரியாமணி. இந்த படத்திற்காக இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. 

'பருத்திவீரன்' படத்தை தொடர்ந்து மிகவும் பிஸியாக மாறிய இவர், தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட மொழி படங்களிலும் நடித்து பிரபலமானார்.

பட வாய்ப்புகள் குறைந்த பின் சின்னத்திரையில் ஒளிப்பரப்பான ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக மாறினார். தற்போதும் டான்ஸ் ஜோடி டான்ஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார். மேலும் கன்னடத்திலும் அதே போன்ற நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார். 

கடந்த ஆண்டு முஸ்தப்பா ராஜ் என்பவரை திருமணம் செய்துக்கொண்ட இவர், திருமணத்தை தொடர்ந்தும் திரையுலகில் கவனம் செலுத்தி வருகிறார். 

இந்நிலையில் தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால். வெப் சீரிஸின் பக்கம் இவருடைய கவனம் திரும்பியுள்ளது.  இவர் இவர் அடுத்ததாக ஹிந்தியில் உருவாகி வரும் 'தி பேமிலி மேன்' என்கிற வெப் சீரியலில் நடிக்க உள்ளார். புலனாய்வு கலந்த திரில்லர் கதையில் உருவாகும் இந்த வெப் சீரிஸில் தேசிய விருது பெற்ற நடிகர் மனோஜ் பாஜ்பாயும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னணி கதாநாயகியாக இருந்து தேசிய விருது பெற்ற நடிகை பிரியாமணி வெப்சீரியலுக்கு வரும்  நிலை வந்து விட்டதா? என ரசிகர்கள் வருத்தமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.   
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!