மிஸ்இந்தியா அனுக்ருதி அளித்த "பட்டய கிளப்பும் பதில்கள்"...!

First Published Jun 30, 2018, 5:20 PM IST
Highlights
Miss india anukrithi answered for all the questions nicely


மிஸ்இந்தியா அனுக்ருதி "பட்டய கிளப்பும் பதில்கள்"...!

சமீபத்தில் மிஸ் இந்தியா பட்டம் வென்ற அனுக்ருதி தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு மிக அழகாக பதில் கோரினார்

"Be Yourself" என்ற சொல்லை தான் அவர் அதிகமாக பயன்படுதினார். எந்த கேள்வி கேட்டாலும் முதலில் நாம் நாமாக இருக்க வேண்டும் என சிரித்துக்கொண்டே பதில் கூறினார்

அனுக்ருதியின் அடுத்த இலக்கு மிஸ் வேர்ல்ட் என தெரிவித்தார். வரும் டிசம்பர் மாதம் சைனாவில் நடைபெற உள்ள மிஸ் வேர்ல்ட் இல் கலந்துக்கொண்டு, என்னால் முடிந்த அனைத்து விதத்திலும் சிறப்பாக செயல்பட முற்படுவேன்...இப்போதைக்கு அது தான் என்னுடைய லட்சியம்....

எனக்கு அப்பாவாக அனைத்தும் செய்துக்கொடுத்ததும் என் அம்மா தான்..என் அம்மாவாக தேவையானதை அனைத்தும் செய்துக் கொடுத்ததும் என் அம்மா தான் என அம்மாவை பற்றி புகழ்ந்து தள்ளினார்...

மறக்க முடியாத வாழ்த்து....

நான் சிறுவயதில் இருக்கும் போது.. இது போன்ற ஆடையை உடுத்தக் கூடாது என கட்டுபாடுகள் விதிப்பார்...ஆனால் இப்ப அவரே நான் மமிஸ் இந்தியா வாங்கியவுடன் என்னை கட்டிபிடித்து அழுது வாழ்த்து தெரிவித்து உள்ளார்.. அதுதான் எனக்கு மாறாக முடியாத வாழ்த்து என அவர் குறிப்பிட்டு உள்ளார்

படிப்பு பற்றி பேசிய போது...

சென்னை லயோலா கல்லூரியில் பிஏ பிரெஞ்ச் இரண்டாம் ஆண்டு படித்த வருகிறான். இப்போதைக்கு மிஸ் வேர்ல்ட் தான் தன்னுடைய இலக்கு..மிஸ் வேர்ல்ட் முடிந்த உடன் நான் மீண்டும் என்னுடைய படிப்பை தொடர்வேன் என அவர் தெரிவித்து உள்ளார்

திருநங்கைகளுக்கே முக்கியத்துவம்..!

இந்த உலகத்தில் திருநங்கைகள் மீதான பார்வை மாற வேண்டும்.. என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்து வந்தாலும், திருநங்கைகள் மீதான ஒரு கண்ணோட்டம் இன்னும் மாறவில்லை..எனவே  இதற்காக நான் பாடுபடுவேன் என தெரிவித்து உள்ளார்

தமிழ்நாடு மக்களுக்கு இது குறித்த அறிதல் மிக குறைவே....

பெண்கள் இது போன்ற போட்டிகளில் கலந்துக்கொள்ள ஆர்வம் காட்டுவது இல்லை.. அப்படியே ஆர்வம் இருந்தாலும் எப்போது எங்கே என அவர்களுக்கு அவ்வளவாக தெரிவது இல்லை....

குழந்தைகளுக்கு எதிராக நடைப்பெறும் பாலியல் வன்கொடுமை பற்றி.....

அதை பற்றி சொல்ல வேண்டும் என்றால், முன்பை விட இப்போது குறைந்து விட்டது தான் என சொல்ல வேண்டும்...கல்வி பெருக பெருக, நல்ல வளர்ச்சி இருக்கு...மேலும் இது போன்ற குற்றங்களும் மெதுவாக குறைந்துதான் வருகிறது என தெரிவித்து இருந்தார்.

click me!