
இன்ஜினியரிங் படித்து விட்டு, திரையுலகம் மேல் உள்ள ஆர்வத்தின் காரணமாக பிரபல நியூஸ் சேனலில், செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி, சீரியல் நாயகியாக வளர்ந்து தற்போது வெள்ளித்திரையில் கலக்கி வருபவர் பிரியா பவானி சங்கர். இவர் நடிப்பில் முதல் முதலாக வெளியான 'மேயாதமான்' திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இப்படத்தை ரத்ன குமார் இயக்கி இருந்தார்.
இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான, கடைக்குட்டி சிங்கம் படம் முதல் சமீபத்தில் வெளியான 'ஓ மணப்பெண்ணே' படம் வரை, அனைத்தும் வெற்றிப் படங்களாக அமைந்ததால் கோலிவுட் திரையுலகின் ராசியான நடிகை என்கிற பெயரையும் பெற்றார்.
தற்போது இவரது கைவசம் அரை டஜன் படங்களுக்கு மேல் உள்ளது. சிம்புவின் பத்து தல, ராகவா லாரன்சுடன் ருத்ரன், அருண் விஜய் ஜோடியாக யானை, அதர்வாவுடன் குருதி ஆட்டம், கமலின் இந்தியன் 2, தனுஷுடன் திருச்சிற்றம்பலம் என பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் பிரியா பவானி சங்கர், சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இயங்கி வருகிறார். அதில் தனது புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில், தற்போது ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் 360 கிலோ எடையை அசால்ட்டாக தூக்கி அவர் ஒர்க் அவுட் செய்வதை பார்த்த ரசிகர்கள் மெர்சலாகிப் போய் உள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.