பிக்பாஸ் பிரபலங்களை ரிப்பீட் மோடில் தாக்கும் கொரோனா... ஷெரினை தொடர்ந்து மற்றுமொரு நடிகைக்கும் தொற்று உறுதி

Ganesh A   | Asianet News
Published : Jan 11, 2022, 06:07 AM ISTUpdated : Jan 11, 2022, 06:09 AM IST
பிக்பாஸ் பிரபலங்களை ரிப்பீட் மோடில் தாக்கும் கொரோனா... ஷெரினை தொடர்ந்து மற்றுமொரு நடிகைக்கும் தொற்று உறுதி

சுருக்கம்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகை திரிஷா, ஷெரின், நடிகர் சத்யராஜ், விஷ்ணு விஷால் ஆகியோர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று நடிகை ஷோபனாவிற்கு ஒமிக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரித்து வருவதால், திரையுலகம் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. பொங்கலுக்கு ரிலீசாவதாக இருந்த வலிமை, ராதே ஷ்யாம், ஆர்.ஆர்.ஆர் என அடுத்தடுத்து படங்களின் ரிலீஸ் தள்ளிப்போடப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருந்தாலும், சமீப காலமாக திரைப்பிரபலங்கள் ஏராளமானோர் கொரோனாவால் பாதிக்கப்படுவது தொடர்கதை ஆகி வருகிறது.

கடந்த மாதம் நடிகர்கள் கமல்ஹாசன், விக்ரம் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பெற்று மீண்டனர். கடந்த வாரம் நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதேபோல் நடிகை மீனாவும் அவரது குடும்பத்தினரும் கொரோனாவின் பிடியில் சிக்கினர். 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகை திரிஷா, ஷெரின், நடிகர் சத்யராஜ், விஷ்ணு விஷால் ஆகியோர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று நடிகை ஷோபனாவிற்கு ஒமிக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், தற்போது நடிகை ரைசாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: எனக்கு இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு உறுது செய்யப்பட்டு உள்ளது. இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தலைவலி, உடல்வலி, காய்ச்சல், தொண்டை கரகரப்பு உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளன. நான் சென்னையில் நடுங்கிக் கொண்டு இருக்கிறேன். இன்னும் எவ்ளோ நாளுக்கு இந்த வைரஸ் இருக்குமோ” என குறிப்பிட்டுள்ளார்.  

இதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன் பிக்பாஸ் பிரபலமும், நடிகையுமான ஷெரினுக்கு இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

kalyani Priyadarshan : அவ்ளோ அழகு! ஸ்டன்னிங் லுக்கில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்
Gabriella Charlton : சுடிதாரில் இவ்ளோ அழகை காட்ட முடியுமா? சீரியல் நடிகை கேப்ரியால்லாவின் போட்டோஸ் பாருங்க!