
பிரபல பெங்காலி நடிகை பிரத்யுஷா பால் என்பவருக்கு சமூக ஊடக கணக்கில் பாலியல் மிரட்டல் விடுத்தது அச்சுறுத்தும் விதமாக மர்மநபர் ஒருவர் குறுச்செய்திகளையும், புகைப்படங்களையும் அனுப்பி வந்த நிலையில், அவர் மீது... தற்போது நடிகை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
ஏற்கனவே பல நடிகைகள் சமூக வலைத்தளம் மூலம் மர்ம நபர்களால் பள்ளியில் தொல்லைக்கு ஆளாக பட்டதாக கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளனர். அவர்களை தொடர்ந்து வங்க மொழி படங்களில் நடித்து பிரபலமான பிரதியுஷா பாலும் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்.... " இதுபோன்ற சம்பவங்களால் நடிகைகள் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள் . அந்த மர்ம நபர் என்னுடைய புகைப்படங்களை மார்பிங் செய்து ஆபாச தளத்தில் வெளியிட்டுள்ளார். நண்பர்கள், என் சிகையலங்கார நிபுணர், உள்ளிட்ட அனைவருக்கும் பரப்பப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் அந்த மர்ம நபரின் குறுச்செய்திகள், மற்றும் ஆபாச புகைப்படங்களை நிராகரித்த நடிகை, தற்போது அவருக்கே பாதகமாக அமைந்த பின்னர் இதுகுறித்து, போலீஸ் புகார் கொடுத்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக யாரையும் போலீசார் கைது செய்யவில்லை என்றாலும், புகார் தொடர்பாக இன்ஸ்டாகிராமில் நடிகையை தொந்தரவு செய்த நபர் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
தன்னுடைய 16 வயதில் நடிக்க துவங்கிய நடிகை பிரதியுஷா பால் வங்க மொழியில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார், மேலும் சில சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர். இவர் பாலியல் ரீதியாக மிரட்டப்பட்ட சம்பவம் தற்போது திரையுலகினர் மற்றும் இவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.