Pooja Hegde: பீஸ்ட் பட ஷூட்டிங்குக்கு இன்றுடன் குட்-பை சொல்லும் பூஜா ஹெக்டே! படம் குறித்து கசியவிட்ட தகவல்!

Published : Dec 10, 2021, 01:34 PM IST
Pooja Hegde: பீஸ்ட் பட ஷூட்டிங்குக்கு இன்றுடன் குட்-பை சொல்லும் பூஜா ஹெக்டே! படம் குறித்து கசியவிட்ட தகவல்!

சுருக்கம்

தளபதி விஜயின் (Vijay) 'பீஸ்ட்'  படத்தில்  (Beast Movie) கதாநாயகியாக நடித்து வரும் நடிகை பூஜா ஹெக்டே  (Pooja Hegde), இன்றுடன் 'பீஸ்ட்' படப்பிடிப்பில் இருந்து விடைபெறுவதாகவும், படம் குறித்தும், தளபதி விஜய் குறித்தும் பேசியுள்ள வீடியோவை தற்போது, சன் பிச்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.    

தளபதி விஜயின் (Vijay) 'பீஸ்ட்'  படத்தில்  (Beast Movie) கதாநாயகியாக நடித்து வரும் நடிகை பூஜா ஹெக்டே  (Pooja Hegde), இன்றுடன் 'பீஸ்ட்' படப்பிடிப்பில் இருந்து விடைபெறுவதாகவும், படம் குறித்தும், தளபதி விஜய் குறித்தும் பேசியுள்ள வீடியோவை தற்போது, சன் பிச்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் பீஸ்ட். விஜய் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், யோகிபாபு, செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அதிரடி ஆக்ஷன் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வரும் இதில், நடிகர் விஜய் ராணுவ அதிகாரியாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டை ஒட்டி இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது.

அவ்வப்போது இந்த படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் குறித்த தகவலை வெளியிட்டு வரும் படக்குழு, சமீபத்தில் கூட... 'பீஸ்ட்' படத்தின் 100 ஆவது நாள் ஷூட்டிங் குறித்து தெரிவித்து புகைப்படம் ஒன்றை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டது. மேலும் இந்த படம் இதுவரை வெளியாகாத நிலையில் கூட, 2021 ஆம் ஆண்டு அதிகம் சமூக வலைத்தளத்தில் பயன்படுத்த பட்ட ஹேஷ்டேக் பட்டியலில் பீஸ்ட் மூன்றாவது இடத்தை பிடித்து கெத்து காட்டியது.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், நடிகை பூஜா ஹெக்டே இன்றுடன், படப்பிடிப்பில் இருந்து விடைபெறுவதாக கூறும் வீடியோ ஒன்றை, சன் பிச்சர்ஸ் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் பூஜா ஹெக்டே கூறியுள்ளதாவது... "பீஸ்ட் படத்தில் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சி.படப்பிடிப்பில் நாங்கள் நிறைய சிரிக்க வைத்தோம். நீங்களும் படத்தை பார்த்து சிரிப்பீர்கள் என்று நம்புகிறேன். பீஸ்ட் படம் இயக்குனர் நெல்சன் ஸ்டைலிலும், விஜய் சாரின் ஸ்டைலிலும் இருக்கிறது. முழுக்க முழுக்க பொழுதுபோக்காக இருக்கும்,” என்று தெரிவித்துள்ளார்.

தெலுங்கு படங்களில் தற்போது அதிக கவனம் செலுத்தி வரும் பூஜா ஹெக்டே, ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் இவர் நடிப்பில் திரைக்கு வரவிருக்கும் பிரமாண்ட படங்களான  ‘ராதே ஷ்யாம்’ மற்றும் ‘ஆச்சார்யா’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!