Rushda Rahman: நடிகர் ரகுமானின் மகள் திருமண வரவேற்பில் கலந்து கொண்டு வாழ்த்திய முதல்வர்! வைரலாகும் புகைப்படம்!

Published : Dec 10, 2021, 11:21 AM ISTUpdated : Dec 10, 2021, 12:08 PM IST
Rushda Rahman: நடிகர் ரகுமானின் மகள் திருமண வரவேற்பில் கலந்து கொண்டு வாழ்த்திய முதல்வர்! வைரலாகும் புகைப்படம்!

சுருக்கம்

தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் ரகுமானின் மகள் ருஷ்டாவிற்கு நேற்று டிசம்பர் (9.12.2021) அன்று மிக பிரமாண்டமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்த நிலையில் அதில் தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார்.  

தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் ரகுமானின் மகள் ருஷ்டாவிற்கு நேற்று டிசம்பர் (9.12.2021) அன்று மிக பிரமாண்டமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்த நிலையில் அதில் தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார்.

நடிகர் ரகுமான் கடந்த 1983 ஆம் ஆண்டு மலையாள சினிமாவின் மூலம், தனது வாழ்க்கையைத் தொடங்கியவர். அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க துவங்கினார். மேலும் இவர் தமிழில் நடித்த படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான, புது புது அர்த்தங்கல், சங்கம், ராம், பில்லா, சிங்கம் II, 36 வயதினிலே, போன்றவை சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற படங்களாகும்.

மேலும் செய்திகள்: Katrina Kaif- Vicky Kaushal Wedding: சிவப்பு நிற லெஹங்காவில் காதலனை கரம் பிடித்த கத்ரீனா! திருமண புகைப்படங்கள்

 

தற்போது ஜெயம் ரவியின் ஜன கண மன, விஷாலுடன் துப்பறிவாளன் 2  மணி ரத்னத்தின் இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காவிய மல்டி ஸ்டாரர் வரலாற்று படமான 'பொன்னியன் செல்வன்' ஆகிய படைகளில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடத்த 1993 ஆம் ஆண்டு, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாய்ரா பானுவின் சகோதரி மெஹ்ருன்னிஸா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

மேலும் செய்திகள்: Jayam Ravi wife Aarthi: அந்த இடத்தில் குத்திய டாட்டூ தெரிய.. போஸ் கொடுத்து ஹீரோயின்களை மிஞ்சிய ஆர்த்தி ரவி!

 

இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில், ரகுமானின் மூத்த மகளான ருஷ்டா ரஹ்மான், மற்றும் அல்தாப் நவாப் ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நேற்று மிகவும் பிரமாண்டமாக நடந்துள்ளது. இதில் ஏ.ஆர்.ரகுமான் குடும்பத்தினர் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான முக ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியதோடுபசுமைக் கூடை மரக்கன்றுகளை பரிசாக வழங்கினார். மேலும் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தங்கமயிலின் 80 சவரன் நகையில் 8 சவரன் மட்டும் தங்கம் : கதிரிடம் உண்மையை வெளிப்படுத்திய ராஜீ!
இன்னும் 100 நாளில் சம்பவம் இருக்கு... கவுண்ட் டவுன் உடன் வெளிவந்த டாக்ஸிக் அப்டேட்