Katrina - Vicky Kaushal wedding: மலைக்க வைக்கும் பிரமாண்டம்... வெளியானது கத்ரீனா முதல் திருமண வீடியோ!!

Published : Dec 09, 2021, 08:28 PM IST
Katrina - Vicky Kaushal wedding: மலைக்க வைக்கும் பிரமாண்டம்... வெளியானது கத்ரீனா முதல் திருமண வீடியோ!!

சுருக்கம்

கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கவுஷல் திருமணம் இன்று மாலை 3.30 முதல் 3.45 க்கும் தங்களுடைய சமர்த்தாய முறைப்படி திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களது முதல் திருமண வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.  

கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கவுஷல் திருமணம் இன்று மாலை 3.30 முதல் 3.45 க்கும் தங்களுடைய சமர்த்தாய முறைப்படி திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களது முதல் திருமண வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

பாலிவுட்டின் காதல் ஜோடியான கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌஷல் இன்று முதல் தங்களுடைய திருமண வாழ்க்கையை துவங்க உள்ளனர். இவர்களது திருமணம் ராஜஸ்தானின் உள்ள சவாய் மாதோபூரில் அமைந்துள்ள சிக்ஸ் சென்ஸ் கோட்டையில் நடைபெற்றது. எனவே இன்று முதல் கத்ரீனா கைஃப் அதிகாரப்பூர்வமாக திருமதி கௌஷல் ஆகிவிட்டார்.

இவர்களுடைய திருமணத்தில் கலந்து கொள்பவர்களுக்கு போன், கேமரா போன்றவற்றிக்கு தடை விதித்துள்ளதால், இவர்களுடைய திருமணத்திற்கு முன்பாக நடந்த மெஹந்தி, ஹல்தி, போன்ற சடங்குகளின் புகைப்படங்கள் கூட வெளியாகவில்லை. இது  கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌஷாலின் ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவே அமைந்தது. எனினும் நேற்று முன்தினம் கத்ரினாவின் மெஹந்தி புகைப்படம் என சில புகைப்படங்கள் வெளியாக பின்னர், அது விளம்பரம் ஒன்றிக்கு எடுக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இவர்களின் திருமணம் குறித்த புகைப்படங்கள் மற்றும்  வீடியோக்கள் ஏதேனும் வெளியாகுமா? என பாலிவுட் ரசிகர்கள் காத்திருந்த நிலையில், தற்போது ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றும் விதமாக மலைக்க வைக்கும் இவர்களின் திருமண வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில் கத்ரீனா தன்னுடைய கணவர் விக்கி கோஷலுடன் நிற்பதும் பட்டசுகள் வெடித்து பலர் இவர்களை வரவேற்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.

இவர்கள் திருமணத்திற்கு பின்னர் இந்த புதுமண ஜோடி, அங்குள்ள புகழ்பெற்ற சௌத் மாதா கோவிலுக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது. தற்போது அரண்மனையின் மேல் தளத்தில் மணமக்கள் உடையில் கத்ரீனாவும், விக்கி கவுஷலும் நிற்பது வீடியோ இதோ...

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விஜய் சேதுபதியை கலாய்த்த கானா வினோத்... காமெடி ஜட்ஜால் பிக் பாஸ் கோர்ட்டில் சிரிப்பலை..!
மாமனார் - மருமகன் மோதல்; குடும்ப சண்டையால் பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2; ஹைலைட்ஸ்!