ஓவியாவின் 'மெர்லின்' வெப் தொடர்... ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Published : Jun 03, 2021, 07:19 PM IST
ஓவியாவின் 'மெர்லின்' வெப் தொடர்... ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சுருக்கம்

பிக்பாஸ் பிரபலமும் நடிகையுமான ஓவியா நடித்துள்ள 'மெர்லின்' என்கிற வெப் தொடர் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரின் ரிலீஸை, ஓவியா ஆர்மியை சேர்ந்த ரசிகர்கள் எதிர்பார்த்து கார்த்திருக்கின்றனர்.  

பிக்பாஸ் பிரபலமும் நடிகையுமான ஓவியா நடித்துள்ள 'மெர்லின்' என்கிற வெப் தொடர் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரின் ரிலீஸை, ஓவியா ஆர்மியை சேர்ந்த ரசிகர்கள் எதிர்பார்த்து கார்த்திருக்கின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றதுமே, முதலில் நினைவுக்கு வரும் ஒரு நபராக உள்ளவர் ஓவியா. ஒரு வேலை அவர் 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருந்திருந்தால் அவர் தான் டைட்டில் வின்னராக மாரி இருப்பார். ஆனால் அப்போது அவருக்கு எதிராக அங்குள்ள அனைவருமே செயல்பட்டதும், கூடவே காதல் தோல்வியும் அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. எனவே பாதியிலேயே வெளியேறினார்.

இவருடைய ஆட்டிடியூட், பேசும் வார்த்தைகள், செய்யும் செயல், பாசம் காட்டுவது, கோவம் கொள்வது என ஓவியா எது செய்தாலும் அவரது ரசிகர்களுக்கு சரியாக படவே, பலர் இவருக்கு ஆர்மி துவங்கி ஆதரிக்க முடிவு செய்தனர். பிக்பாஸ் வீட்டை விட்டு வந்த பின்னர், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அளவுக்கு பட வாய்ப்புகளில் பிசியாவார் ஓவியா என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவர் நடித்த ’90ml’ ’காஞ்சனா 4’ உள்ளிட்ட ஒருசில படங்கள் மட்டுமே நடித்தார். அந்த படங்களும் சுமாரான வெற்றியை மட்டுமே பெற்றது. மேலும் சில படங்களில் நடிக்க இவரிடம் பேச்சு வார்த்தைகள் தடைந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது வரை அது குறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் ஓவியா கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வெப் சீரிஸ் ஒன்றில் நடித்துள்ளார். 'மெர்லின்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வெப்தொடர் ஜூன் 5ஆம் தேதி முதல், ஆரஞ்சு மிட்டாய் என்கிற  இணைதளத்தில் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின், ஓவியா நடிப்பில் வெளியாக உள்ள இந்த வெப் தொடரை ஓவியா ஆர்மிகள் எதிர்பார்த்து கார்த்திருக்கின்றனர். 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஜனநாயகனுக்கு விடிவு காலம் பிறக்குமா? இறுதி தீர்ப்பு தேதி இதுதான்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Raashi Khanna : ஓவர் கவர்ச்சி..! புடவையில் செம்ம லுக் விட்டு ரசிகர்கள் கண்களை குளிர வைக்கும் ராஷி கண்ணா..!