
தளபதி விஜய்யின் மகன் காரில் இசை கேட்டு கொண்டு... ஜாலி மூடில் செல்லும் வீடியோ ஒன்று தற்போது திடீர் என வைரலாகி வருகிறது.
தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், கடந்த 2009ம் ஆண்டு விஜய்யின் 'வேட்டைக்காரன்' படத்தில் இடம் பெற்ற ஓபனிங் பாடலான நான் அடிச்சா தாங்க மாட்ட பாடலுக்கு தந்தை விஜய்யுடன் சேர்ந்து நடனமாடினார். அதன்பிறகு படங்களில் நடிக்கவில்லை. தனது பள்ளிப்படிப்பை முடித்த பின் சஞ்சய் தனது அப்பாவைப் போலவே சினிமா துறையை தேர்வு செய்து ஃபிலிம் மேக்கிங் தொடர்பாக படிப்பை கனடாவில் படித்து முடித்துள்ளார்.
இதனால் விரைவில், படம் இயக்குவதிலோ அல்லது கதாநாயகனாகவோ தமிழ் சினிமாவில் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது வரை விஜய்யின் மகன் சஞ்சய் நடிக்க உள்ள படம் குறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
மேலும் செய்திகள்: மிதமான மேக்அப்பில்... கண்ணால் பேசும் 'கண்ணம்மா'... கருப்பா இருந்தாலும் அம்புட்டு அழகு!
“ஜங்ஷன் ” என்ற குறும்படத்தில் நடித்ததன் மூலம் சஞ்சய் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதே போல் இவர், அடிக்கடி நண்பர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருவது நாம் அறிந்தது தான். இந்நிலையில் சஞ்சய்யின் 14 நொடி வீடியோ ஒன்று திடீரென சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகள்:சூரிய ஒளி வெளிச்சத்தில்... கீர்த்தி செய்த யோகாவை பார்த்து உருகி போன இளம் நெஞ்சங்கள்..!
இந்த வீடியோவில் சஞ்சய் காரில் சென்று கொண்டிருப்பது போன்றும் அவர் ஹாப்பி மூடில் இசையை ரசித்துக் கொண்டிருப்பது போன்றும் உள்ளது. மேலும் இந்த வீடியோ இரவில் எடுக்க பட்டது என்பது தெரிகிறது. நண்பர்களுடன் இரவு நேரத்தில் காரில் சென்றபோது இந்த வீடியோ எடுத்திருப்பதாக தெரிகிறது. இந்த வீடியோவை தற்போது தளபதி ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.
தற்போது வெளியாகியுள்ள அந்த வீடியோ இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.