பட்ட பகலில்... கத்தி முனையில்... நடிகை நிலாவின் தந்தைக்கு நேர்ந்த கொடுமை! நடிகை வெளியிட்ட உண்மை!

Published : May 07, 2020, 11:34 AM ISTUpdated : May 07, 2020, 11:37 AM IST
பட்ட பகலில்... கத்தி முனையில்... நடிகை நிலாவின் தந்தைக்கு நேர்ந்த கொடுமை! நடிகை வெளியிட்ட உண்மை!

சுருக்கம்

பிரபல நடிகையும் மாடலுமான, நிலாவின் தந்தையிடம் பட்ட பகலில் இருவர், கத்தி முனையில் அவரிடம் வழிப்பறியில் ஈடுபட்டதை, நடிகை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.    

பிரபல நடிகையும் மாடலுமான, நிலாவின் தந்தையிடம் பட்ட பகலில் இருவர், கத்தி முனையில் அவரிடம் வழிப்பறியில் ஈடுபட்டதை, நடிகை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.  

தமிழ் திரையுலகில் இயக்குனர், நடிகர் எஸ்ஜே சூர்யாவின் ’அன்பே ஆருயிரே’ படத்தின் மூலம் கதாநாயகியாக, திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர் மீரா சோப்ரா. தமிழ் சினிமாவிற்காக தன்னுடைய பெயரை நிலா என மாற்றிக்கொண்டார்.  இவர் பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவினர் ஆனவர்.


'அன்பே ஆருயிரே' படத்தை தொடர்ந்து, தெலுங்கு திரைப்படங்களிலும் கவனம் செலுத்த துவங்கினார். தமிழில் இயக்குனர் எழில் இயக்கத்தில் நடிகர் பிரசாந் நடித்த ’ஜாம்பவான்’,  சிபிராஜுடன் ‘லீ’ அர்ஜுனனின் ’மருதமலை’ என தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.

மேலும் செய்திகள்: கியூட் குட்டி பையன் முதல் ஹாட் ஹாண்ட்சம் வரை நடிகர் அதர்வாவின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்!
 

இவர் நடிப்பில் தமிழில் கடைசியாக கடந்த 2015 ஆம் ஆண்டு, கில்லாடி திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் நடிகர் பரத் கதாநாயகனாக நடித்திருந்தார்.  

தற்போது பாலிவுட் திரையுலகில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் கடந்த வருடம் ஹிந்தியில் இவர் நடிப்பில், செக்க்ஷன் 375 , நாஸ்டிக், ஆகிய படங்கள் வெளியானது. மேலும் தெலுங்கு- ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் உருவாகி வரும் மொகாலி புவ்வு என்கிற படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

மேலும் செய்திகள்: 2 வருடத்திற்கு முன் சர்ச்சை பேச்சு...! இப்போது பிக்பாஸ் சீசன் 3 பிரபலத்தில் மீது FIR பதிந்த போலீஸ்!
 

இந்த நிலையில் டெல்லியில் உள்ள போலீஸ் காலனியில் நிலாவின் தந்தை வாக்கிங் சென்றபோது திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த  செல்போனை பறித்து சென்றதாக கூறியுள்ளார். இது குறித்து நிலாவின் தந்தை டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் இந்த புகாரின் அடிப்படையில் வழிப்பறி செய்த மர்ம நபர்களை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

இதுகுறித்து நடிகை நிலா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் கூறியபோது என்னுடைய தந்தை வாக்கிங் சென்றபோது இரண்டு நபர்கள் ஸ்கூட்டரில் வந்து கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்து சென்றனர். தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு இதுதானா? என்று கேள்வி எழுப்பி அதனை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கும் டெல்லி போலீசாருக்கும் டேக் செய்துள்ளார்

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!