தமிழ் சினிமாவை தட்டித்தூக்க போகும் சன்பிக்சர்ஸ்... 1000 கோடி பட்ஜெட்டில் போட்ட மெகா பிளான்...!

By Kanimozhi PannerselvamFirst Published May 7, 2020, 11:04 AM IST
Highlights

 அதனைத் தொடர்ந்து தளபதி 65, காலபைரவா, காஞ்சனா 4 உள்ளிட்ட படங்கள் படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை. 

ஒரு படத்தை தயாரிப்பதில் மட்டுமல்ல பட்டி, தொட்டி எல்லாம் தனது மார்க்கெட்டிங் திறமையால் கொண்டு சேர்ப்பதிலும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை அடித்துக்கொள்ள ஆள் இல்லை. மாஸ் ஹீரோவானாலும் சரி, புதுமுக ஹீரோவானாலும் சரி வேற லெவலுக்கு அவர்களை பிரபலப்படுத்த சன் டிவி பயன்படுத்தும் டெக்னிக்கே வேற ரகம். அதேபோல் சன் பிக்சர்ஸ் தொட்டது எல்லாமே ஹிட் தான். சமீபத்தில் ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன் என டாப் ஹீரோக்களை வைத்து சன்பிக்சர்ஸ் தயாரித்த படங்கள் வசூல் ரீதியாக செம்ம மாஸ் காட்டியது. 

இதையடுத்து தற்போது மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அண்ணாத்த படத்தை தயாரித்து வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில்  குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனா நடிப்பதாகவும், வில்லியாக குஷ்புவும், வக்கீலாக நயன்தாராவும், தங்கையாக கீர்த்தி சுரேஷும் நடிப்பதாக கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிறுத்தை சிவா கூட்டணியில் தயாராகும் படம் என்பதால் மிகுந்த பொருட் செலவில் அண்ணாத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருவதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: வீட்டுக்குள் வித்தியாசமாக படுகவர்ச்சி போட்டோ ஷூட்... அப்பா, அம்மாவுடன் சேர்ந்து எல்லை மீறிய பிரபல நடிகை...!

அந்த படத்தை தொடர்ந்து அரண்மனை 3, தனுஷின் D44 ஆகிய படங்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து தளபதி 65, காலபைரவா, காஞ்சனா 4 உள்ளிட்ட படங்கள் படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை. 

இதையும் படிங்க: புடவையில் அம்மாவையே ஓரங்கட்டிய குஷ்பு மகள்... ஓவர் ஸ்லிம் லுக்கில் தாறுமாறு வைரலாகும் போட்டோ...!

அதுமட்டுமின்றி, சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோரையும் வைத்து அடுத்தடுத்து படங்களை இயக்க சன்பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆக மொத்தம் கிட்டதட்ட 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் அடுத்தடுத்து படங்களை தயாரிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம். தற்போது கொரோனா பீதியால் திரைத்துறை பாதிக்கப்பட்டுள்ளதால், புதிய படங்கள் குறித்த அறிவிப்பை நிறுத்தி வைத்துள்ளதாம். அதுவரை முன்னணி ஹீரோக்களுக்கு பொருத்தமான கதைகளை தேர்வு செய்யும் பணியில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தீவிரமாக இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 
 

click me!