
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தை பிடித்து வெளியேறிய நடிகை ஒருவர் மீது, இரண்டு வருடத்திற்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் சர்ச்சையான விதத்தில் பேசியதற்காக இப்போது FIR பதிந்து விசாரித்து வருவது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் எப்போது பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கியதோ, அப்போது தான் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியும் துவங்கப்பட்டது. அந்த வகையில் கடந்த வருடம், நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், மக்களின் ஆதரவை பெற்று, வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட பிரபலம் ஸ்ரீமுகி. ஆனால் சில ஓட்டுகள் குறைவாக பெற்றதால் இரண்டாவது இடத்தை பிடித்து வெளியேறினார்.
இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன், காமெடி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார். அப்போது, குறிப்பிட்ட ஒரு சமூகத்தை இவர் தாக்கி பேசியதாக, ஒருவர் வீடியோ ஆதாரத்தோடு புகார் கொடுக்க, போலீசார் நடிகை ஸ்ரீமுகி மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள்.
இந்த நிகழ்ச்சி குறித்து பேசியுள்ள நடிகை ஸ்ரீமுகி, அது ஒரு காமெடி நிகழ்ச்சி தான் என்றும், இரண்டு வருடங்களுக்கு முன், குறிப்பிட்ட அந்த நிகழ்ச்சியில் நான் என்ன பேசினேன் என்பது கூட தனக்கு நினைவில் இல்லை என தெரிவித்துள்ளார். அதே போல் தன்னுடைய பேச்சு எந்த விதத்திலாவது யாரையும் புண்படுத்தி இருந்தால், மன்னிப்பு கேட்கவும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், வீடியோவை ஆதாரமாக வைத்து நடிகை ஸ்ரீமுகி மீது போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்திருப்பது தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.