’சென்னை போலீஸ் அத்தனை பேரையும் டிஸ்மிஸ் பண்ணுங்க மோடிஜி’...பிரதமருக்கே ட்விட் போட்ட தமிழ் நடிகை...

By Muthurama LingamFirst Published Oct 16, 2019, 1:23 PM IST
Highlights

அவரது அக்கியூஸ்ட்கள் பட்டியலில் நேற்று இயக்குநர் சேரனும் இணைக்கப்பட்டார். பெண்களைத் தொட்டுப்பேசிய வகையில் அவர் யோக்கியர் அல்ல. அவரது தொடுகையில் உள்நோக்கம் இருக்கிறது என்று அவரையும் தொடர்ந்து வம்பிழுக்கத் துவங்கியுள்ளார்.

ஒரே நேரத்தில் இயக்குநர்கள் சேரன், நவீன், நடிகர் கமல், பிக்பாஸ் போட்டியாளர்கள் கவின்,சாண்டி ,முகேன், தர்ஷன் போன்ற பல பிரபலங்களை வம்பிழுத்து மீடியாக்களுக்கு தீனி போட்டு வரும் சர்ச்சை நடிகை மீரா மிதுன் தனக்கு தொடர்ந்து அநீதி இழைக்கப்படுவதால் சென்னையைச் சேர்ந்த அத்தனை போலீஸ்காரர்களையும் டிஸ்மிஸ் செய்யவேண்டும் என்று ஒரு அதிபயங்கர யோசனையை பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கையாக வைத்திருக்கிறார்.

பார்களில் குடித்துவிட்டு ஆபாச நடனமாடுவது, தம் அடிப்பது, ஊர் சுற்றுவது என்று படு பிசியாக இருக்கும் மீரா மிதுன் தன்னுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற சாண்டி,கவின்,தர்ஷன், முகேன் ஆகியோர் குறித்து கொச்சையான விமர்சனங்களை தொடர்ந்து பரப்பி வருகிறார். அவரது அக்கியூஸ்ட்கள் பட்டியலில் நேற்று இயக்குநர் சேரனும் இணைக்கப்பட்டார். பெண்களைத் தொட்டுப்பேசிய வகையில் அவர் யோக்கியர் அல்ல. அவரது தொடுகையில் உள்நோக்கம் இருக்கிறது என்று அவரையும் தொடர்ந்து வம்பிழுக்கத் துவங்கியுள்ளார்.

இந்நிலையில் சென்னை போலீஸார் தனக்கு கடந்த ஒருவருடமாக தொல்லை தருவதாக ஆடியோ வீடியோக்களில் புலம்ப ஆரம்பித்த அவர் அடுத்து வெளியிட்ட ட்விட்டர் பதிவொன்றில் பிரதமர் நரேந்திர மோடியை டேக் பண்ணி அவருக்கு ஒரு முக்கியமான பணியை ஒப்படைத்திருக்கிறார். அதாவது இவருக்குத் தொந்தரவு தருவதால் சென்னையிலுள்ள அத்தனை போலீஸ்காரர்களையும் டெல்லியிலிருந்து கிளம்பி வந்து மோடி கைது செய்யவேண்டுமாம். அவரது பதிவு இது, “எனக்கு அநீதி இழைத்த சென்னை போலீசார் அனைவரும் டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும். ஏனெனில் அவர்கள் சட்ட ஒழுங்கை சீர்குலைக்கவில்லை. ஆனால் சீர்குலைவை பாதுகாக்கிறார்கள். போலீசார் சட்டத்தை அமல்படுத்தும் போது அந்த சட்டத்தை பின்பற்றவும் வேண்டும். ஒராண்டாக எனக்கு அநீதி இழைக்கப்படுகிறது. இன்னும் எனக்கு டார்ச்சர் தொடர்கிறது” என்கிறார் மீரா மிதுன். எப்ப கிளம்பி வர்றீங்க மோடிஜி?

The whole who did injustice to me should be dismissed because police are here not to create disorder but to preserve disorder, police should follow the law while enforcing the law. One year of injustice and still i have tortures ! https://t.co/yAYmz4f6T8

— Meera Mitun (@meera_mitun)

click me!