
லோகேஸ் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘’ நான் எனது நண்பனின் அலுவலகத்தில் டீ விற்கும் சிறுவனிடம் பேசினேன். அப்போது அந்த சிறுவன் ’நான் விஜய்க்காக உயிரைக் கொடுக்கும் ரசிகன். எனது வாழ்க்கையில் அவரை ஒருமுறையாவது சந்திக்க வேண்டும். அல்லது முதல்நாள் முதல் காட்சியாக பிகில் படத்தை பார்க்க வேண்டும்’’ எனக் கூறினான்.
இது சாத்தியமா என பிகில் பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்திக்கும் டேக் செய்திருந்தார். இதனை ரீடிவிட் செய்து தனது பக்கத்தில் பதிந்துள்ள தருமபுரி தொகுதி எம்.பி செந்தில் குமார், ‘’நடிகர் விஜய் அவர்கள் இந்த சிறுவன் பள்ளி செல்ல உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்தக் குழந்தை தொழிலாளி முறை அகற்றப்பட வேண்டும். குழந்தை தொழிலாளர் முறை தண்டனைக்கு உரியது. தயவு செய்து விஜய் அவர்கள் இந்த சிறுவனுக்கு உதவ வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
சமூகவலைதளப்பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் எம்.பி செந்தில்குமாரிடம் முன்பு பழனி என்பவர், கழிவறை சுத்தம் செய்து தருகிறீர்களா? என்று நக்கலாக கேள்வி எழுப்பி இருந்தார். ‘இதில் என்ன இருக்கு பழனி, எங்கே என்று சொல்லுங்கள். நானே நேரில் வந்து சரி செய்து தருகிறேன். இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல. புனிதமான செயல்தான்’ என்று பதிலளித்து பலரையும் ஈர்த்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.