முதுகில் குத்திய பிக்பாஸ் ஆணாதிக்க துரோகிகள்...டாப் சீக்ரெட்டுகளை லீக் செய்யும் மீரா மிதுன்...

Published : Oct 16, 2019, 11:13 AM ISTUpdated : Oct 16, 2019, 11:15 AM IST
முதுகில் குத்திய பிக்பாஸ் ஆணாதிக்க துரோகிகள்...டாப் சீக்ரெட்டுகளை லீக் செய்யும் மீரா மிதுன்...

சுருக்கம்

சில மாதங்களாகவே படு பிசியாக இருக்கும் நடிகை மீரா மிதுன், பிக் பாஸ் இல்லத்தை விட்டு வெளியே வந்த பிறகு அடுத்த ஸ்ரீரெட்டி என்று சொல்லும் அளவுக்கு இன்னும் கொஞ்சம் கொடூரமாக மாறியிருக்கிறார். இரு தினங்களுக்கு முன்பு தன்னை ‘அக்னி சிறகுகள்’படத்திலிருந்து நீக்கியதற்கு இயக்குநர் ‘மூடர் கூடம்’நவீனிடம் வம்பு வளர்த்து அவர் சம்பந்தமான ஆடியோ,வீடியோக்களை வெளியிடப்போவதாக மிரட்டினார்.

பிக்பாஸ் இல்லத்தில் நுழைவதற்கு முன்பிருந்தே பரபரப்பான சர்ச்சைகளில் சிக்கி விளம்பரக் குளிர்காயும் நடிகை மீரா மிதுன் கவின்,சாண்டி, தர்ஷன், முகேன் ஆகியோரை மிகவும் கொச்சையாக விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

சக போட்டியாளர்களுன் தொழில் மோதல், பிக்பாஸ் இல்லத்தில் சர்ச்சை, போலீஸ் நிலையங்களில் வழக்கு, கமிஷனர் அலுவலகத்தில் புகார் என்று சில மாதங்களாகவே படு பிசியாக இருக்கும் நடிகை மீரா மிதுன், பிக் பாஸ் இல்லத்தை விட்டு வெளியே வந்த பிறகு அடுத்த ஸ்ரீரெட்டி என்று சொல்லும் அளவுக்கு இன்னும் கொஞ்சம் கொடூரமாக மாறியிருக்கிறார். இரு தினங்களுக்கு முன்பு தன்னை ‘அக்னி சிறகுகள்’படத்திலிருந்து நீக்கியதற்கு இயக்குநர் ‘மூடர் கூடம்’நவீனிடம் வம்பு வளர்த்து அவர் சம்பந்தமான ஆடியோ,வீடியோக்களை வெளியிடப்போவதாக மிரட்டினார்.

அடுத்து அவரது அட்டாக் பிக்பாஸ் இல்ல ‘வி ஆர் பாய்ஸு’ கோஷ்டிகளின் மீது திரும்பியது. ‘அந்த நாலு பசங்களுமே எனக்காக ஜொள்ளு விட்டாங்க. என் பின்னாலேயே அலைஞ்சாங்க’என்று அசிங்கப்படுத்திய அவர், தற்போது பிக்பாஸ் கொண்டாட்டங்களில் நீங்கள் ஏன் கலந்துகொள்ளவில்லை? என்ற கேள்விக்கு,...அவர்கள் 4 பேருமே ஆணாதிக்கவாதிகள், முதுகில் குத்திய துரோகிகள், கோழைகள் எனக்கு நிறைய புராஜக்டுகள் இருக்கின்றன. நான் அவர்களைப்போல் வெட்டியாக இல்லை’என்று செருப்படி பதிவு போட்டிருக்கிறார்.

இத்துடன் இல்லாமல், தமிழ் சினிமா பிரபலங்கள் பற்றிய பல ரகசியங்கள் என்னிடம் இருக்கிறது. அவற்றை ஒவ்வொன்றாக வெளியிட்டு நான் யார் என்பதை காட்டப்போகிறேன் என்றும் மீரா மிரட்டல் விடுத்துள்ளார். ஸோ பாடகி சுஸி லீக்ஸ், ஸ்ரீரெட்டி லீக்ஸ் வரிசையில் மீரா லீக்ஸும் ஹிட்டடிக்க வாழ்த்துகள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Dushara Vijayan : ஜில் பனியில் கூலாகும் துஷாரா விஜயன்... இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் பிக்ஸ்!
Malavika Mohanan : பார்த்தாலே கிக்!! இறக்கமான சுடிதாரில் மாளவிகா மோகனின் நச் போஸ்..