
கேரளாவிலிருந்து தமிழ் சினிமாவிற்குள் நுழைந்த நடிகைகள் பெரும்பாலும் கவர்ச்சி மூலமாகதான் தமிழ் ரசிகர்களை ஆட்டிவைத்தனர். ஆனால் அவர்களில் விதிவிலக்காக இருந்தவர் மீரா ஜாஸ்மின். ஆள் சராசரிக்கும் குறைவான உயரமே. ஆனால் அவரது துறுதுறு கண்களும், கழுக் மொழுக் கன்னமும், என்னென்னவோ செய்யும்.
ரன்னில் மாதவனோடு, புதிய கீதையில் விஜய்யோடு, ஆஞ்சநேயாவில் அஜித்தோடு என்று அவர் ஜோடி போடாத ஹீரோக்களே இல்லை. செம்ம ரவுண்டு வந்தார். சண்டைக்கோழி ஹிட்டுக்கு அவரது நடிப்பும் மிக முக்கிய காரணம். லிங்குசாமி படமென்றாலே மீராவுக்கு எங்கிருந்துதான் வருமோ அப்படியொரு அழகு. தெறிக்கவிட்டார் அப்படத்தில்.
இதன் பின் ரகசிய திருமணம் முடிந்து காணாமலே போனவர், இத்தனை வருடங்கள் கழித்து இப்போது மீண்டும் வந்துள்ளார். அதுவும் சாதாரணமாக வரவில்லை. பழைய லெவலை விட செம்ம லெவலில் வந்திருக்கிறார். ஜெயராமுடன் ‘மகள்’ எனும் மலையாள படத்தில் கமிட் ஆகியிருக்கும் மீராஜாஸ்மின், தனது ரீ எண்ட்ரியை உலகுக்கு உணர்த்துவதற்காக போட்டோ ஷூட் ஒன்று நடத்தியுள்ளார்.
அதை சாதாரணமாக செய்திருந்தால் பரவாயில்லை. ஆனால் ‘நான் இன்னமும் ஃபிட்டாதான் இருக்கேன் பாஸ்’ என்று சொல்வது போல் டாப்பை ஓவர் லோவாக்கி அவர் கொடுத்திருக்கும் அந்தமாதிரி இந்த மாதிரி போஸ்களையும், அதிலுள்ள விஷயங்களின் ரிச்னஸையும் பார்த்து அலறிக் கிடக்கிறார்கள் அந்த காலத்தில் அவரோடு ஹீரோவாக நடித்தவர்கள்.
அவர்களில் சிலர் மீராவின் நம்பரை வாங்கி போனை போட்டு ‘நீ கொஞ்சம் சும்மா இருக்றியா மீரா! எனக்கெல்லாம் வயசாகி போச்சு. மறுபடியும் ஹீரோவால்லாம் பண்ண முடியாது. ஹீரோவா பண்ணினால்தான் உன் கூட டூயட் பாட முடியும். திரும்பி வந்துட்டன்னு தெரியும். ஆனா இந்தளவுக்கா வந்து நிப்ப? ம்ம்ம்முடியலையே மீரா. உன்னை வெண்ணையில செஞ்சாங்களா?’ என்று உருகி ஓடியிருக்கின்றனர்.
அங்கிள் ஹீரோஸ் இப்படி தன்னிடம் எக்கச்சக்கமாய் வழிவதைப் பார்த்து கெக்கே பிக்கேவென சிரித்திருக்கிறார் மீரா.
மேடம் அடுத்த செட் போட்டோஸ் எப்ப வரும்?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.