
மலையாள திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் மஞ்சு வாரியர். இவர் கடந்த 2018-ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். இப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார் மஞ்சு வாரியர். இதையடுத்து மீண்டும் மலையாள படங்களில் கவனம் செலுத்தி வந்த அவர், தற்போது 4 ஆண்டு இடைவெளிக்கு பின் மீண்டும் தமிழில் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார்.
அதன்படி தற்போது எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி உள்ள துணிவு படத்தில் நடித்து முடித்துள்ளார் மஞ்சு வாரியர். அஜித் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவரின் டீம் மேட்டாக நடித்துள்ளார் மஞ்சு வாரியர். இதில் ஏராளமான ஸ்டண்ட் காட்சிகளிலும் துணிச்சலாக நடித்து மஞ்சு வாரியர் ஆக்ஷன் ஹீரோயினாக அசத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... நண்பன் ரஜினிக்காக ரெட்ரோ லுக்கிற்கு மாறிய மோகன்லால்... ஜெயிலர் படத்தில் அவருக்கு இப்படி ஒரு கேரக்டரா?
துணிவு திரைப்படம் வருகிற ஜனவரி 11-ந் தேதி பொங்கல் விருந்தாக திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் இரு தினங்களே உள்ளதால் புரமோஷன் பணிகளும் படு ஜோராக நடைபெற்று வருகிறது. வழக்கம்போல் அஜித் புரமோஷனுக்கு நோ சொல்லிவிட்டதால், இயக்குனர் எச்.வினோத்தும், நடிகை மஞ்சு வாரியரும் தான் தொடர்ந்து பல்வேறு பேட்டிகளை கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் துணிவு புரமோஷன் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இதில் இயக்குனர் எச்.வினோத்தும், நடிகை மஞ்சு வாரியரும் கலந்துகொண்டனர். அப்போது துணிவு படத்தில் அஜித் பேசிய டயலாக் ஒன்றை பேசிக்காட்டுமாரு நடிகை மஞ்சு வாரியரிடம் தொகுப்பாளர் கேட்டார். உடனடியாக எழுந்து வந்து, கையில் துப்பாக்கியுடன் அஜித் பேசிய கெட்டவார்த்தை டயலாக்கை பேசிக்காட்டி அதிர்ச்சி கொடுத்தார் மஞ்சு வாரியர். கெட்ட வார்த்தையில் பேசிவிட்டு அதனை பீப் போட்டு விடுமாறு அவர் சொல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... ‘வாரிசு’க்கு பாசிடிவ் ரிவ்யூ தர ப்ளூ சட்டை மாறனுக்கு ரூ.1 கோடியா..! இதென்னடா புது உருட்டா இருக்கு
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.