
சிம்பு படத்தில் அறிமுகம்
கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான அச்சம் என்பது மடமையடா படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். இவர் அப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதையடுத்து விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக சத்ரியன் படத்தில் நடித்த இவர், பின்னர் முத்தையா இயக்கிய தேவராட்டம் படத்தில் கவுதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடித்தார்.
தமிழில் அண்மையில் இவர் நடிப்பில் வெளியான எஃப்.ஐ.ஆர் திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றது. இவர் தமிழ் தவிர மலையாளம், தெலுங்கு போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
காதல் சர்ச்சை
நடிகை மஞ்சிமா மோகன் தமிழ் திரையுலகைச் சேர்ந்த இளம் நடிகர் ஒருவரை காதலிப்பதாகவும், அவரை விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் சமீபத்தில் தகவல் பரவியது. இருப்பினும் இதுகுறித்து எந்த விளக்கமும் கொடுக்காமல் மவுனம் காத்து வந்த மஞ்சிமா சமீபத்திய பேட்டியில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
மஞ்சிமாவின் விளக்கம்
அவர் கூறியதாவது: “நான் மூன்று வயதில் சினிமாவுக்கு வந்தேன். எனது வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு மகிழ்ச்சியான நிகழ்வுகளையும் மக்களுடன் பகிர்ந்து கொள்வதை விரும்புபவள் நான், இதுவரை அவர்களிடம் இருந்து எதையும் மறைத்தது இல்லை. அந்த வகையில் திருமணம் போன்ற பெரிய நிகழ்வை நான் யாரிடமும் மறைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.
இந்த செய்தியை வெளியிட்டவர் என்னிடம் அதைப்பற்றி கேட்டபோது நான் மறுத்தேன். இருந்தாலும் அவர் தொடர்ந்து அதை வெளியிட்டார். அது எனக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது. இந்த விஷயத்தில் என் பெற்றோரின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என்பதே எனது பதற்றத்துக்கு காரணமாக இருந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் இந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை” என்று மஞ்சிமா கூறினார். இதன்மூலம் அவர் காதல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இதையும் படியுங்கள்... Parithabangal Sudhakar : யூடியூப் பிரபலம் ‘பரிதாபங்கள்’ சுதாகருக்கு திருமணம்! நீண்டநாள் காதலியை கரம்பிடித்தார்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.