Parithabangal Sudhakar : சுதாகரின் திருமண புகைப்படங்கள் சமுக வலைதளங்களில் வெளியாகி வைரலானதைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நண்பர்களை பிரபலமாக்கிய யூடியூப்
பரிதாபங்கள் என்கிற யூடியூப் சேனல் மூலம் பிரபலமானவர்கள் கோபி - சுதாகர். கல்லூரி நண்பர்களான இவர்கள், படித்து முடித்த பின் சினிமாவின் மீது இருந்த ஆர்வம் காரணமாக சென்னையில் வாய்ப்பு தேடி அலைந்தனர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் சான்ஸ் கேட்டு அழைந்த இவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
வீடியோக்கள் செம்ம வைரல்
இதையடுத்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் வேலைக்கு சேர்ந்த இவர்கள், அதில் அரசியல் பிரபலங்களை ட்ரோல் செய்து வெளியிட்ட வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது. நாளுக்கு நாள் இவர்கள் நிகழ்ச்சிக்கென தனி ரசிகர் கூட்டமே உருவானது. இதனையடுத்து இவர்கள் இருவரும் இணைந்து பரிதாபங்கள் என்கிற யூடியூப் சேனலை ஆரம்பித்தனர்.
அதில் இவர்கள் போட்ட வீடியோக்கள் ஏராளமானவை இளசுகள் மத்தியில் பிரபலமானதால், யூடியூப்பில் இருவரும் அசுர வளர்ச்சி கண்டனர். இதையடுத்து இவர்களுக்கு பட வாய்ப்புகளும் வந்தன. அந்த வகையில் ஜாம்பி, மீசைய முறுக்கு போன்ற படங்களில் இருவரும் நகைச்சுவை வேடத்தில் நடித்திருந்தனர்.
சுதாகருக்கு திருமணம்
இதனிடையே பரிதாபங்கள் சுதாகருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிவகாசியை சேர்ந்த பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில், அவர்கள் இருவருக்கும் நேற்று திருச்சியில் திருமணம் நடைபெற்றது. அதில் நண்பர்களும், உறவினர்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
சுதாகரின் திருமண புகைப்படங்களும், வீடியோக்களும் சமுக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகின. இதைப்பார்த்த ரசிகர்கள் அவருக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... Aishwarya Rajinikanth : ராகவா லாரன்ஸுடன் சர்ப்ரைஸ் கூட்டணி அமைத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்... அப்போ சிம்பு?