
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இங்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 21 ஆயிரத்து 963 ஆக உள்ளது. இதுவரை 9 ஆயிரத்து 204 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த கொடூர வைரஸின் பிடியில் இருந்து ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 439 பேர் மீண்டுள்ளது சற்றே ஆறுதல் அளிக்கும் செய்தியாகும். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்காமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் புயல் வேகத்தில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி ஜூன் 30ம் தேதி வரை இந்தியா முழுமைக்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சிக்கென ஸ்லிம் லுக்கில் நயன்தாரா.... புடவையில் இதுவரை யாருமே பார்த்திருக்காத ஸ்பெஷல் போட்டோ ஷூட்...!.
கொரோனா பரவலை தடுப்பதற்காக ஒரு குறிப்பிட்ட இடத்தில் கொரோனா தொற்று அதிகமாக இருப்பின் அந்த பகுதியே மூடி சீல் வைக்கப்படுகிறது. அந்த வகையில் கொரோனா பாதிப்பு காரணமாக பிரபல நடிகை வசித்து வரும் குடியிருப்பு பகுதிக்கு சீல் வைக்கப்பட்டதாக வெளியான தகவல் பரபரப்பை கிளப்பியுள்ளது. மணிரத்னத்தின் உயிரே படத்தில் தக்க தைய்ய தைய்யா தைய்யா பாடலுக்கு ஆட்டம் போட்டதன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். 1998ம் ஆண்டு இந்தி நடிகர் சல்மான் கானின் அர்பாஸ் கானை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இந்த நட்சத்திர தம்பதிக்கு அர்ஹான் கான் என்ற மகன் இருக்கிறார். கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர்.
இதையும் படிங்க: தோனி பட ஹீரோ சுஷாந்த் சிங் தூக்கிட்டு தற்கொலை... 34 வயதிலேயே வாழ்க்கையை முடித்துக்கொண்ட சோகம்...!
தற்போது 46 வயதாகும் மலைக்கா அரோரா மும்பை பந்த்ரா பகுதியில் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருடைய பக்கத்து வீட்டுக்காரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மலைக்கா அரோரா தனது மகனுடன் தனிமைப்படுத்திக்கொண்டார். இதனிடையே மலைக்காவின் குடியிருப்பிற்கு சீல் வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் நடிகையின் குடியிருப்பிற்கு சீல் வைக்கப்படவில்லை என்றும், அப்பார்ட்மெண்ட் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டதாகவும் நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.