நடிகை லட்சுமியின் முன்னாள் கணவரும் நடிகருமான மோகன் ஷர்மா மீது கொலைவெறி தாக்குதல்! காவல் நிலையத்தில் புகார்!

Published : Sep 29, 2023, 09:13 PM IST
நடிகை லட்சுமியின் முன்னாள் கணவரும் நடிகருமான மோகன் ஷர்மா மீது கொலைவெறி தாக்குதல்! காவல் நிலையத்தில் புகார்!

சுருக்கம்

பிரபல நடிகர் மீது கொலைவெறி தாக்குதலில் இருவர் ஈடுபட்ட சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

நடிகை லட்சுமியின் முன்னாள் கணவரும், திரைப்பட நடிகருமான மோகன் சர்மா மீது, இரண்டு பேர் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் முகம், காய், கால் ஆகியவற்றில் காயத்துடன் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக இருக்கும் போது, பிரபல நடிகை லட்சுமியை காதலித்து 1975 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணமான 5 வருடத்திலேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இதை தொடர்ந்து, மோகன் ஷர்மா, சாந்தி என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். லட்சுமியும், சிவச்சந்திரன் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

மோகன் ஷர்மா, தற்போது சில திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து வருகிறார். குறிப்பாக சமீபத்தில் நிறைவடைந்த, 'தாலாட்டு' சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருக்கு சென்னை போயஸ்கார்டனில் அடுக்குமாடி குடியிருப்பு இருந்துள்ளது. இந்த வீட்டை விற்பனை செய்ய தனியார் நிறுவனம் மூலம் விளம்பரம் செய்யப்பட்ட நிலையில்,  2 இடைத்தரகர்கள் மூலம் மருத்துவர் ராஜா ரமணன் என்பவருக்கு கடந்த ஆண்டு வீட்டை விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வீடு அந்த மருத்துவருக்கு விற்பனை செய்த நாள் முதலே, இடைத்தரகர்கள் இருவரும் எந்த வீட்டில் அத்துமீறி நுழைந்து வசித்து வந்துள்ளனர். இது குறித்து நடிகர் மோகன் சர்மா அவர்களிடம் கேட்ட போது, இருவரும் மரியாதை இல்லாமல் பேசியதால், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனால் மோகன் சர்மாவுக்கும், இடைத்தரகர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுளள்து.

 இந்நிலையில் செப்டம்பர் 26ம் தேதி மாலை 7 மணிக்கு மோகன் சர்மா காரில் சென்ற போது அவர் மீது இடைத்தரகர்கள் திடீர் என தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் மோகன் சர்மாவுக்கு, மூக்கு, கை , கால் போன்ற இடத்தில் பலத்த காயம் ஏற்பட்டு, தற்போது சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து மோகன் ஷர்மா காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரின் பேரில், அந்த இரண்டு இடைத்தரகர்களிடமும் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

5 பேருடன் அட்ஜஸ்ட் செய்தால் பிரபல நடிகருக்கு மனைவியாக நடிக்கும் வாய்ப்பு: மிர்ச்சி மாதவி ஷாக் பதிவு!
ஜன நாயகன் 2ஆவது சிங்கிள் எப்போது? இதோ வந்துருச்சுல அப்டேட்!