
கள்ளழகர், முதல்வன், தீனா, தில், காமராசு, உள்ளம் கேட்குமே என தமிழில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை லைலா. இவரின் கன்னக்குழி அழகிற்கு தமிழில் மட்டும் அல்ல, தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் பல ரசிகர்கள் உள்ளனர்.
முன்னணி நடிகையாக இருக்கும் போதே... கடந்த 2006 ஆம் ஆண்டு காதலரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார்.
திருமணமத்திற்கு பின் மும்பையில் வசித்து வரும் இவருக்கு தற்போது 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் திரையுலகை உலுக்கி வரும் 'மீடூ' இயக்கம் குறித்து நடிகை லைலா முதல் முறையாக கருத்து தெரிவித்து இருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில்...
'மீடூ'வில் வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.பாலியல் தொல்லைகளுக்கு முடிவு கட்ட பெண்கள் களத்தில் இறங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லா துறைகளிலும் பெண்களுக்கு பாதிப்புகள் உள்ளன. சினிமா துறையிலும், பெரிய கார்ப்பரேட் அலுவலகங்களிலும் பாலியல் தொல்லைகள் நடக்கிறது.
சுயலாபத்துக்காக பெண்களை ஆண்கள், பயன்படுத்துவதற்கு எதிராக பெண்கள் திரண்டு இருக்கிறார்கள். பெண்களிடம் ஆண்கள் தவறாக நடக்க முயற்சிப்பது இழிவான செயல். பெண்களை குறைத்து மதிப்பிடுவதை நிறுத்த வேண்டும் . திருமணத்திற்கு பிறகு எனக்கு இப்போது நடிக்கும் ஆசை வந்திருக்கிறது. எனக்கு முக்கியத்துவம் உள்ள கதைக்காக காத்திருக்கிறேன்.
என் மனதை பாதிக்கும் கதை ஏதோனும் தோன்றினால், அதை இயக்கும் ஆசையும் உள்ளது. ஆனால் ஒரு போதும் படங்களை தயாரிக்க மாட்டேன். இப்போதெல்லாம் பெண்களை மையப்படுத்தி படங்கள் வருவது வரவேற்கத்தக்கது என நடிகை லைலா கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.