’சர்கார் மாரத்தான்’...ஒரு நாளைக்கு எட்டு காட்சிகள்... சேட்டன்களா என்ன ஆச்சு உங்களுக்கு?

Published : Oct 29, 2018, 01:10 PM ISTUpdated : Oct 29, 2018, 01:11 PM IST
’சர்கார் மாரத்தான்’...ஒரு நாளைக்கு எட்டு காட்சிகள்... சேட்டன்களா என்ன ஆச்சு உங்களுக்கு?

சுருக்கம்

சமீபகாலமாக பிரபல நடிகர்களின் படங்களை  அதிகாலைக்காட்சிகளாக வெளியிடும் ஒரு ட்ரெண்ட் சென்னையில் பெரும்பாலான தியேட்டர்களில் நடைமுறையில் உள்ளது. அந்த அதிகப்படியான காட்சிகள் முறைப்படி அனுமதி பெற்று நடைபெறுகிறதா, அப்படியானால் யார் அதற்கு அனுமதி தருகிறார்கள் என்கிற கேள்விகளுடன் கோர்ட்டில் வழக்கு ஒன்றும் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், கேரளாவில் உள்ள திரையரங்கு ஒன்றில், நடிகர் விஜய்யின் சர்கார் படத்தைக் கொண்டாடும் விதமாக, தொடர்ந்து 24 மணிநேரம், 8 காட்சிகள் திரையிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

நடிகர் விஜய்யின் கோட்டையாக கருதப்படும் கேரளாவில், ’சர்கார்’ படத்தைக் காண இப்போதே ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். அந்த வகையில், கேரளா திருச்சூரில் உள்ள தாய்க்குலம் கார்த்திக்   என்ற திரையரங்கு ‘சர்கார் மாரத்தானிற்கு’ ஏற்பாடு செய்துள்ளது. 

அதன்படி, ’சர்கார்’ வெளியாகும் 6 ஆம் தேதி காலை 5 மணிமுதல், அடுத்த 24 மணிநேரத்திற்கு சர்கார் படத்தை திரையிட உள்ளது. இதில், காலை 5 மணி, காலை 8 மணி,காலை 11.30 மணி, மதியம் 3 மணி, மாலை 6.15 மணி, இரவு 9.15 மணி, இரவு 11.55 மணி, மறுநாள் விடியற்காலை 2.45 மணி என மொத்தம் 8 காட்சிகள் திரையிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் அதிகபட்சமாக 6 காட்சிகள் மட்டுமே நடத்தப்படும் நிலையில் 8 காட்சிகள் நடக்கும் ‘மாரத்தான் சர்கார்’ தற்போது வலைதளங்களில் பரபரப்பான செய்தியாகிவருகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

லட்சங்களில் சம்பளம் வாங்கிய டான்சர் குயீன் ரம்யா, அழகு ராணி வியானா: ஒரு நாளைக்கு எத்தனை லட்சம்?
அடுத்தடுத்து நடையை கட்டிய போட்டியாளர்கள்: இந்த வாரத்தில் டபுள் எவிக்‌ஷன்: பிக் பாஸின் அதிரடி ட்விஸ்ட்!