மகன்களின் முகத்தை முதன்முறையாக காட்டி... இன்ஸ்டாகிராமில் இணைந்தார் நயன்தாரா - முதல் ஆளாக பாலோ பண்ணிய விக்கி

By Ganesh A  |  First Published Aug 31, 2023, 11:47 AM IST

சமூக வலைதளங்கில் இருந்து விலகியே இருந்த நடிகை நயன்தாரா, தற்போது இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளதாக அறிவித்துள்ளார்.


தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. கேரளாவில் பிறந்து வளர்ந்த இவர், ஐயா படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்த நயன்தாராவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்தன. ரஜினி, விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து குறுகிய காலத்திலேயே டாப் ஹீரோயின் லிஸ்ட்டில் இடம்பிடித்தார் நயன்தாரா.

Latest Videos

இவர் சினிமாவுக்கு வந்து 20 ஆண்டுகள் ஆன போதிலும் இன்றும் நம்பர் 1 இடத்தை தக்க வைத்துள்ளதோடு மட்டுமின்றி அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகைகள் பட்டியலில் முதலிடத்திலும் உள்ளார். இதுவரை தென்னிந்திய திரையுலகில் கலக்கி வந்த நயன்தாரா, அடுத்ததாக பாலிவுட்டிலும் காலடி எடுத்து வைத்துள்ளார். அவர் இந்தியில் முதன்முதலில் நடித்த ஜவான் திரைப்படம் வருகிற செப்டம்பர் 7-ந் தேதி திரைக்கு வர உள்ளது.

இதையும் படியுங்கள்... இன்று மங்காத்தா டே.. வெற்றியை கொண்டாடும் இயக்குனர் வெங்கட் - இந்த படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்துள்ளார் நயன்தாரா. ஜவான் படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் அதன் புரமோஷன் பணிகள் பிசியாக நடைபெற்று வருகிறது. நேற்று கூட இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நயன்தாராவை தவிர அப்படத்தில் பணியாற்றிய படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். நோ புரமோஷன் பாலிசியை கடைபிடித்து வருவதால் நயன், இந்த விழாவில் கலந்துகொள்ளவில்லை.

நயன்தாரா ஜவான் விழாவில் கலந்துகொள்ளாததால் ஏமாற்றம் அடைந்த அவரது ரசிகர்களை குஷிபடுத்தும் வகையில் ஒரு சர்ப்ரைஸ் ஒன்றை கொடுத்திருக்கிறார் நயன். இதுவரை எந்த ஒரு சோசியல் மீடியாவிலும் இல்லாமல் இருந்த நயன்தாரா, தற்போது முதன்முறையாக இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வ கணக்கு ஒன்றை தொடங்கி எண்ட்ரி கொடுத்துள்ளார். அதுவும் அவர் பதிவிட்ட முதல் வீடியோவே வேறலெவலில் வைரலாகி வருகின்றன. இதுவரை தனது மகன்களின் முகத்தை காட்டாமல் மறைத்து வந்த நயன், அந்த வீடியோவில் தன் மகன்களுடன் ஹூகூம் பாடலை ஒலிக்கவிட்டு மாஸாக நடந்து வருகிறார். நயனின் இந்த ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.

நயன்தாரா இன்ஸ்டாகிராமில் நுழைந்ததும் அவரை முதல் ஆளாக பாலோ பண்ணியது அவரின் கணவர் விக்னேஷ் சிவன் தான். அதன் பின்னர் ஒரு சில நிமிடங்களிலேயே 50 ஆயிரத்துக்கு மேல் பாலோவர்கள் அவரை பின் தொடர்ந்தனர். 

இதையும் படியுங்கள்... ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்.. பாய் ஃப்ரெண்டுடன் ரகசிய நிச்சயதார்த்தம்? அந்த சீக்ரெட் காதலன் யார் தெரியுமா?

click me!