
கடந்த 5 ஆண்டுகளாக பாலிவுட் உலகில் பல படங்களில் நடித்து வரும் ஜான்வி கபூர், தனது காதலர் ஷிகர் பஹாரியாவுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியானது. இந்த வார தொடக்கத்தில் ஜான்வி கபூர், அவரது காதலன் ஷிகருடன் பாரம்பரிய உடை அணிந்து திருப்பதிக்கு சென்று வந்ததை அடுத்து இந்த தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் சமூக வலைத்தளத்தில் இவர்களது வீடியோ ஒன்று வைரலானதும், நெட்டிசன்கள், அவர்கள் இருவரும் நிச்சயதார்த்தம் செய்திருக்கலாம் என்று ஊகிக்கத் தொடங்கினர். அதே வேலையில், ஜான்வி கையில் ஒரு ஒரு வைர மோதிரம் இருப்பதை கண்ட ரசிகர்கள், நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துவிட்டது என்றே முடிவு காட்டியுள்ளனர்.
சைஸ் என்ன?.... அசிங்கமாக கேள்வி கேட்ட நபருக்கு நடிகை ஷாலு ஷம்மு அளித்த செருப்படி ரிப்ளை
ஆனால் இவை அனைத்தும் வதந்திகள் என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. அம்மா ஸ்ரீதேவியின் பிறந்தநாளையொட்டி பிரார்த்தனை செய்யத் தான் ஜான்வி கபூர் அந்த கோவிலுக்கு சென்றதாக கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் கூட திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜான்வி மற்றும் ஷிகர் ஆகிய இருவரும் ஒன்றாக சென்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அடிக்கடி தலைப்பு செய்திகளில் வந்தாலும், இந்த ஜோடி தங்கள் உருவு குறித்து வாய்திறக்கவில்லை.
சரி யார் இந்த ஷிகர் பஹாரியா?
ஜான்வி கபூருடன் தற்போது டேட்டிங் செய்வதாகக் கூறப்படும் ஷிகர் பஹாரியா, மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் சுஷில்குமார் ஷிண்டேவின் தாய்வழிப் பேரன் ஆவார். இவர் சஞ்சய் மற்றும் ஸ்ம்ருதி என்ற ஜோடிக்கு கடந்த 1996ம் ஆண்டு பிறந்தவர். ஆனால் அவரது பெற்றோர் தற்போது ஒன்றாக இல்லை என்று கூறப்படுகிறது.
அவரது தந்தை ஒரு தொழிலதிபர், ஷிகரின் அத்தை பிரணிதி ஷிண்டே மகாராஷ்டிராவில் மூன்று முறை எம்எல்ஏவாக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.