தனது சொந்த உழைப்பில் முன்னேறி தற்போது ஒரு பாண் இந்தியா நடிகராக மாறி உள்ள நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் அடுத்தடுத்து ஐந்துக்கும் மேற்பட்ட படங்கள் உருவாக காத்திருக்கிறது. அந்த வகையில் பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படம் தான் அவருடைய 51 வது திரைப்படம்.
தனுஷ் நடிப்பில் அருள் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கான பணிகளை தனுஷ் முடித்த நிலையில், அடுத்தபடியாக உருவாகும் அவருடைய ஐம்பதாவது திரைப்படத்திற்கு தனுஷ் தயாராகி வருகிறார். இந்த திரைப்படத்தை அவரே இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கேப்டன் மில்லர் படபிடிப்பு பணிகள் முடிந்து டிசம்பர் மாதம் அந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் தனது 51 வது திரைப்படத்தை பிரபல நடிகர் தனுஷ் நடிக்க உள்ளார். ஏற்கனவே இந்த படம் குறித்து அவ்வப்போது சில தகவல்கள் வெளியாகி வருகின்றது.
இந்நிலையில் இந்த திரைப்படம் ஒரு அரசியல் மாபியா கதைக்களம் சார்ந்த திரைப்படமாக உருவாக உள்ளது என்றும், இந்த கதையை பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவிடம் கூறிய பொழுது, அது அவருக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து தனுசுடன் இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் நாகார்ஜுனா விரைவில் இணைவார் என்ற தகவல்கள் வெளியாகி வருகிறது. ஏற்கனவே இந்த திரைப்படத்தில் நாயகியாக நடிக்க பிரபல நடிகை ராஸ்மிகா மந்தானா தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏ ஆர் ரகுமான் அவர்கள் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்க வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறப்படுகிறது.
இந்த திரைப்படத்தை முடித்த பிறகு ஒரு ஹிந்தி திரைப்படத்தில் நடிக்க உள்ள நடிகர் தனுஷ், அதன் பிறகு வெற்றிமாறன், செல்வராகவன், நெல்சன் திலீப் குமார் என்று பல முன்னணி இயக்குனர்களுடன் பணியாற்ற இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ் தற்போது இயக்கி வரும் அவரது 50வது பட பணிகள் முடிந்தவுடன் அடுத்த பட பணிகளில் இணைவார்.
சைஸ் என்ன?.... அசிங்கமாக கேள்வி கேட்ட நபருக்கு நடிகை ஷாலு ஷம்மு அளித்த செருப்படி ரிப்ளை