அம்மா குஷ்புவுக்கே டப் கொடுக்கும் மகள்... மார்டன் உடையில் தாறுமாறு வைரலாகும் போட்டோஸ்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : May 27, 2020, 05:48 PM IST
அம்மா குஷ்புவுக்கே டப் கொடுக்கும் மகள்... மார்டன் உடையில் தாறுமாறு வைரலாகும் போட்டோஸ்...!

சுருக்கம்

சின்ன வயசு குஷ்புவையே மிஞ்சும் அளவிற்கு செம்ம க்யூட்டாக இருக்கும் அனந்திதாவின் புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகிறது. 

சினிமா, அரசியல், சின்னத்திரை என சகலகல வள்ளியாக வலம் வருபவர் குஷ்பு. சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வரும் குஷ்புவிற்கு இருக்கும் தில்லு வேற எந்த நடிகைகளிடமும் இருக்காது. மனதில் பட்டதை பளீச்சென கூறிவிடுவார். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த காலத்திலேயே இயக்குநர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். குஷ்பு - சுந்தர் சி தம்பதிக்கு அவந்திகா, அனந்திதா என இரண்டு மகள்கள் உள்ளனர். 

இதையும் படிங்க: “கமலுக்கும், எனக்கும் என்ன உறவு”... முதன் முறையாக மனம் திறந்த பூஜா குமார்...!

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். அதில் சூப்பர் ஸ்டாருக்கு வில்லியாக குஷ்பு நடிப்பதாக கூறப்படுகிறது.  குஷ்பு அவ்வப்போது சோசியல் மீடியாவில் தனது மகள்களுடன் எடுத்துக்கொண்ட பதிவேற்றி வருகிறார்.  அதை பார்த்த பலரும் குஷ்புவின் இரண்டு மகள்களும் ஓவர் குண்டாக இருப்பதாக சகட்டுமேனிக்கு கமெண்ட் செய்து வந்தனர். இதையடுத்து கடுமையான உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாட்டில் இறங்கிய குஷ்புவின் இளைய மகள் அனந்திதா தனது உடல் எடையை கணிசமாக குறைத்துள்ளார். 

இதையும் படிங்க: நயன்தாரா நம்பர் ஒன் நடிகையாக நீடிக்க காரணம் இதுதான்?... உண்மையை போட்டுடைத்த பிரபல நடிகர்...!

தனது கொழு, கொழு உடல் எடையை குறைத்து செம்ம ஸ்லிம் லுக்கிற்கு மாறியுள்ள அனந்திதா தற்போது சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கிறார். கிண்டலுக்கு ஆளான தனது உடல் எடையை குறைத்த அனந்திதா தனது ஸ்லிம் போட்டோஸை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். அப்படி அனந்திதா பகிரும் புகைப்படங்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு நாளுக்கு நாள் அழகாகி வரும் அனந்திதா மார்டன் உடையில் எடுத்த போட்டோஸை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

இதையும் படிங்க: பெற்ற தாயிடமே மகளை படுக்கைக்கு அழைத்த இயக்குநர்... கதறிய பிரபல குழந்தை நட்சத்திரம்...!

சின்ன வயசு குஷ்புவையே மிஞ்சும் அளவிற்கு செம்ம க்யூட்டாக இருக்கும் அனந்திதாவின் புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகிறது. இதற்கு முன்னதாக அம்மாவின் சேலையை கட்டி அனந்திதா பதிவிட்ட புகைப்படங்கள் வேற லெவலுக்கு வைரலானது குறிப்பிடத்தக்கது. குஷ்பு மகளின் அசத்தல் போட்டோ இதோ...

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மேக்கப் தொல்லை எனக்கு இல்லை... நடிகை சாய் பல்லவி ஓபன் டாக்
ஆஸ்கர் ரேஸில் அடுத்த லெவலுக்கு சென்ற ஒரே ஒரு இந்திய படம் - விருதை தட்டிதூக்குமா?